பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 105 நாங்கள் பத்து மணிக்குச் சென்னை சேர்ந்தோம். எங்கேயோ ஓரிடத்தில் ஒரு சத்திரத்தில் நாங்கள் தங்க ஏற்பாடு செய்திருந்தனர். பகல் உணவுக்குப் பின் நாங்கள் மாநாட்டுப் பந்தலுக்கு அழைத்துச் செல்லப்பெற்றோம். பந்தல் மிகப் பெரியதாகவும் அழகாகவும் இருந்தது. நாங்கள் சென்ற அன்றைக்கு மாநாட்டு நிகழ்ச்சிகள் ஒன்றும் இல்லை. எல்லாம் முதல் நாளே முடிந்துவிட்டன. அப்பா அவர்கள் அந்தப் பந்தலில்தான் எங்களது நாடகத்தை நடிக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் நாங்கள் அங்கே சென்றபோது யாரும் எங்களைப்பற்றிக் கவலைப் பட்டதாகக் காணோம். என்றாலும் அப்பாவும் தலைமை ஆசிரியரும் எங்கெங்கோ சென்று வந்தார்கள். அங்குள்ளவர் அனைவரும் மூட்டை முடிச்சுகளுடன் தத்தம் ஊர்களுக்குப் புறப்பட ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். நாங்கள் எல்லோரும் கூட்டமாக அந்த மாநாட்டுப் பந்தலையும் பிறவிடங்களையும் கண்டு கொண்டே அன்றைப் பொழுதைக் கழித்தோம். அன்று அங்கு நாடகம் இல்லை. ஏன்? என்றுமே அந்த இடத்தில் நாடகம் நடக்கவில்லை. நாடகம் என்று சொன்னேன்; ஆனால் எந்த நாடகம் என்று சொல்லவில்லை அல்லவா! அது ஒரு சீவ காருண்ய நாடகம். மாடும். ஆடும், கோழியும், கொசுவும் கூட்டம் கூடித் தாம் மக்களுக்குச் செய்யும் நன்மைகளை விளக்கி, அத்தனை நன்மை பெறும் மனிதன் அவைகளுக்கு எங்தெந்த வகையில் இன்னல் செய்கிறான் என்பதைக் காட்டும் நிலை ஒரு புறம். உலகில் அரசரும் அமைச்சரும் பிறரும் நாட்டில் மனிதப் பண் பற்று வாழ்கின்ற வாழக்கை முறை ஒரு புறம். தவறு செய்கின்றவர்களைத் தண்டனைக் குள்ளாக்கும் இயமன் நாட்டுக் காட்சிகள் ஒரு புறம். இப்படிச் சென்றது அக்கதை என்று நினைக்கின்றேன். முழுதும் நன்றாக நினைவில் இல்லை. மொத்தத்தில் அது ஒரு சீவகாருண்ய நாடகம். நான் பறவை விலங்குகளின் மாநாட்டுக்கு இடப