பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் - 107 . மறுநாள் நாடகம் நன்றாக நடைப்பெற்றது. கோகலே ஹால்' என்ற இடத்தில் அன்று நாடகம் நடைபெற்றது. அனைவரும் நன்றாக நடித்தனர். நன்றாக நடித்த மூவருக்குப் பரிசுகளும் தந்தனர். எனக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. அதற்குரிய நூல்களும் கொடுத்தார்கள். இந்த நாடகத்தை நடத்த ஏற்பாடுகளையெல்லாம் செய்து நல்ல முறையில் உதவியவர் அறிஞர் பூரீ பால் என்பதை அங்கு அறிந்து கொண்டேன். நான் வளர்ந்து அறிவறிந்த பிறகு அவரோடு நெருங்கிப் பழகினேன். நான் சென்னை சென்ற பிறகு அவர் எங்கள் குடும்ப நண்பராகவே விளங்கினார். உயிர்களின் உறவினராகவே வாழும் அவரை pவ பந்து’ எனவே அழைத்தனர். அவர் தொண்டு சிறப்பதாக! எடுத்த பணியை முட்டின்றி முடித்த மகிழ்ச்சியில் அப்பா ஆழ்ந்துவிட்டார்கள். மறுநாளும் நாங்கள் சென்னை யிலேயே தங்கினோம். திருவாளர் பூரீ பால் அவர்கள் முயற்சியால் எங்களுக்கெல்லாம் நல்ல விருந்துக்கு ஏற்பாடாகி இருந்தது. அன்றோ அல்லது மறு நாளோ வேறொரு இடத்தில் எப்படியாவது மற்றொரு முறை நாடகத்தைச் சென்னையில் நடிக்க வேண்டும் என்று அப்பா முயன்று கொண்டிருந்தார்கள். என்றாலும் முடியவில்லை. எனவே மறுநாள் காலையில் நாங்கள் திரும்பி வாலாஜாபாத்துக்குப் புறப்பட்டோம். g வரும் வழியில் மாணவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் உட்கார முடியவில்லை. மாநாட்டுக்கு வந்து அப்படியே சென்னை வேலைகளையும் முடித்துவிட்டுத் திரும்பும் மக்கள் இரெயிலில் அதிகம். எனவே அங்கங்கே நாங்கள் பிரிந்து ஏறிக்கொண்டோம். அத்துடன் வழியில் அப்போதுதான் மின்சார பாதைகளுக்கான வேலைகளும் தொடங்கப் பெற்றிருந்ததென நினைக்கிறேன். அடிக்கடி இரெயில் நின்று நின்று வந்தது. எங்களுடன் வந்த நண்பர் ஒருவர் -என் வகுப்பிலே படித்தவர் என்று நினைக்கிறேன்