பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் முதற் பதிப்பின் முன்னுரை உதகையின் உயர்ந்த மலை உச்சிக்குச் சென்றுவிட்டேன்' தொட்டபெட்டா என்ற அந்த உச்சியிலிருந்து நாற்புறமும் நோக்கினேன். எத்தனை மேடுபள்ளங்கள், கானாறுகள், குன்றுகள், சிறுமலை வழிகள், கணவாய்கள், காடுகள், தோட் டங்கள்...இப்படிப் பலப்பல என் கண்முன் காட்சி அளித்தன. மேட்டுப்பாளையம் தொடங்கி, தொட்டபெட்டா உச்சி வரை யில் நான் கடந்து வந்த மைல்களை எண்ணி எண்ணிப் பார்த் தேன். சுமார் நாற்பது கற்கள். அந்த நாற்பது மைலிலும் தான் எத்தனை எத்தனைக் காட்சிகள் - வேறுபாடுகள் காண் கின்றன. பவானியாறும் அதன் பாலமும், அதன்பின் புகை வண்டி மலைஏறும் காட்சியும் - ஒருபுறம் பள்ளத்தாக்கும் மற்றொருபுறம் உயர்ந்த செங்குத்தான மலையும் அவற்றின் இடையில் பல் சக்கரத்தைப் பற்றி ஏறும் புகைவண்டியும் கண் முன் நின்றன. வளைந்து வளைந்து தாழ்ந்தும் செங்குத்தாக நிமிர்ந்தும் செல்லும் கற்பாறைகளும் கண்முன் தோன்றின. பரந்த பள்ளத்தாக்குகளும் குன்னுரர் போன்ற நகரங்களும் பிற அமைப்புக்களும் தெரிந்தன. அருகிலே உதகையின் காட்சி கண்ணுக்கு விருந்தாக அமைந்தது. ஆம்! நான் இம் மலைப் பகுதியின் உச்சிக்கு வந்து விட்டோமென நினைத்து நிமிர்ந்தேன். கதிரவன் தன் பொற் கிரணங்களை எழுப்பி மேலே வந்துகொண்டே இருந்தான். மலை உச்சியில் உடன் இருந்த நண்பர் இது இரண்டாவது உயரிய மலை (Second Highest Peak) என்று கூறினார். ஆகவே திகைத்தேன். இதனினும் உயரிய உச்சி ஒன்று உண்டு போலும் என உணர்ந் தேன். நண்பருக்கும் அதுபற்றித் தெரியவில்லை. அது எங்கிருக்கிறது என்று அருகில் உள்ள மற்றவரைக் கேட்டேன். யாரும் அதுபற்றி அறிந்தவர்களாகவே தெரியவில்லை. என்றாலும் பலரும் கூறும் உயரிய உதகையின் உச்சிக்கு வந்து விட்டோம் என்ற நிலையில் சுற்றி நோக்கினேன். அடுத்து வரும் வாழ்வின் உயர்ச்சி நமக்குத் தெரியாது மறைந்து நிற்பது போன்று அக்காலை வேளையில் உயரிய அந்த உச்சி நமக்குப் புலனாகவில்லை போலும் என நினைத்தேன். ஆம்! வானத்துக் கதிரவனை அதே வேளையில் அண்ணாந்து நோக்கினேன். ஆதவன் கொடுமை இன்றேனும் அதிகநேரம் அவன் ஒளியில் நிற்க இயலாது வந்தவழித் திரும்ப முயன் றேன். அந்த வேளையில் அக்கதிரவன்-என் வாழ்நாளைக் கூறிடும் பகலவன் இன்று வந்த இச்சிறு நெறியை நோக்கி