பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. இடிந்த கோயில் எங்கள் ஊர் மிகப் பழமைவாய்ந்த ஊர். ஊர் முழு வதும் வேளாளர்களே வாழ்ந்து வந்தனர். கரிகாலன் காலத்தில் காஞ்சியை அடுத்துள்ள கிராமங்களில் வேளாளர் களைக் குடியேற்றினதாக வரலாறு கூறுகிறது. அக் காலத்தில் குடியேறிய வேளாளர் குடிகளோ இவ்வூரார் என நினைக்கவேண்டியுள்ளது. எங்கள் ஊர் மட்டுமன்று, காஞ்சியைச் சுற்றிலும் இதுபோன்று பல ஊர்கள் வேளாளர் வாழும் ஊர்களாக, இவ்வகையில் இருக்கின்றன என்னலாம். எங்கள் ஊர்க் கோடியில் ஒரு சமணர் சிலையிருப்பதைக் கொண்டு, இவ் வேளாளர்களெல்லாம் ஒரு காலத்தில் சமணராக இருந்து மாறினவர்கள்தாம் என்று கூடச் சிலர் கூறுகிறார்கள். எங்கள் ஊர்ப் பக்கத்தில் உள்ள ஆர்ப்பாக்கம் என்ற ஊரில் ஒரு பெரும் சமணர் கோயிலே இருக்கிறது. அதில் வாழ்கின்ற அத்தனைபேரும் வேளாளர்கள்தாம். அவர்களும் ஒருகால் சமணர்களாக இருந்திருக்கலாம் என்பர். ஏழாம் நூற்றாண்டில் காஞ்சியும் சுற்றுப்புறங்களும் சமணர் வாழிடங்களாக இருந்ததெனப் பல்லவர்தம் வரலாற்றால் அறிகிறோம். பிறகு திருநாவுக்கரசரால்.தொண்டை நாடே சைவ சமயத்துக்கு மாற்றப்பட்ட தல்லவா! அந்த நிலையில் இங்கும் சைவம் பரவி இருக்கலாம். கரிகாலன் காலத்தில் சைவர்களாக இருந்து. இடையில் சமணராகிப் பிறகு மீண்டும் சைவர்களான வேளாண் குடிமக்கள். நிரம்ப வாழ்கின்ற ஊர்கள் பல இன்று காஞ்சியைச் சுற்றி இருக்கின்றன என்று கொள்ளல் பொருந்தும். இவ்வாறான பழம்பெரும் ஊராக விளங்கும் எங்கள் ஊரில் சமணர் சிலை ஒன்றைத் தவிர வேறு சமணச் சார்புடைய கோயில்கள் ஒன்றும் கிடையா. என்றாலும் எங்கள் ஊருக்குக் கீழ்க்கோடியில் ஊரையெல்லாம் விட்டுத் தள்ளிச் சற்றுத் தூரத்தில் ஒரு பாழான கோயில் ஒன்று உள்ளது. நான் மேலே கூறிய விழாக்கள் நிறைந்த