பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 10 ஆனந்த முதல் ஆனந்த வரை போட்டியால் தேர்வு நடைபெறும் கோயில் - ஊர் இடையில் எங்கள் வீட்டுப் பின் பக்கத்தில் இருக்கிறது. அது கட்டப் பெற்று ஒரு சில நூற்றாண்டுகளே கழிந்திருக்க வேண்டும். ஆனால் ஊர் எல்லைக்கு அப்பால் இருக்கும் அந்தப் பழங் கோயிலோ பிற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பெற்று இருக்கவேண்டும். மிகப் பெரியதாக இருந்து. காலப்போக்கில் அது அழிந்த நிலையில் குறுகி இருக்க வேண்டும் என நினைக்கவேண்டியுள்ளது. பாலாற்றங் கரையில் இருக்கும் அந்தக் கோயிலின் எல்லையை அந்த ஆற்று வெள்ளமே சிறுகச் சிறுகப் பதம் பார்த்து விழுங்கி இருக்க வேண்டும். அக் கோயிலுக்கு ஒரு கல் தொலைவிற்கு உள்ளேயே இருக்கும் திருமுக்கூடலில்தான் பிற்காலச் சோழர் காலத்திய பெருங் கோயில் ஒன்று இருக்கிறது. அதில் உள்ள கல்வெட்டு மூலம் அங்கு பல மருத்துவம் பெற்ற படுக்கை களோடு கூடிய ஒரு மருந்தகமும், ஒரு கல்லூரியும் அச் சோழர் காலத்தில் இருந்ததாக அறிகிறோம். ஒருவேளை இந்தச் சிறிய கோயிலும் அக்காலத்தில் கட்டியதாகவே இருக்கலாம். சுற்றுச் சுவர்கள் ஒன்றும் இன்றேனும், உட்புறச் சுவரில் சிற்சில கல்வெட்டுக்கள் காண்கின்றன. அவற்றையெல்லாம் அரசியல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வந்து கண்டு எடுத்துச் சென்றார்கள் என அறிந்தேன். பின்னர் அவற்றைப்பற்றி அந்த அலுவலகத்தில் விசாரித்தபோது யாதொரு தகவலும் கிடைக்கவில்லை. எடுத்த கல்வெட்டுப் படிகள் என்னாயிற்றோ! யார் அறிவார்? கோயில் அமைப்பு மிகச் சிறியது. ஆற்றங் கரையை ஒட்டி அமைந்த கோயில் அது. ஆற்றில் கரை ஓரமாகக் கோயிலை ஒட்டிச் சில சமயங்களில் சிற்றருவி ஒன்று ஒடிக் கொண்டிருக்கும். கோயிலை மேலும் ஆற்று வெள்ளம் அடித்துப் போகாதபடி கரையில் கற்களை இட்டுச் சிறிது தூரம் கரை கட்டி இருந்தார்கள். இடிந்த கோயில்களி