பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 117 கலந்து ஒரளவு பயின்று கொண்டே வந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். குடியிருந்த வீடு ஒரு சிறு அறைதான். இரவில் மற்றொரு பக்கத்தில் இருந்த தாழ்வாரத்தில் படுத்துக் கொள்வேன், பாட்டியார் அந்த அறையிலேயோ, அதற்கடுத்த சிறு தாழ்வாரத்திலேயோ படுத்துக் கொள்வார்கள். பரந்த பெரு வீடுகளில் பழக்கப்பட்டு வாழ்ந்த எங்களுக்கு அந்தச் சிறு அறை வாழ்க்கை மிக்க துன்பத்தைத்தான் கொடுத்தது. என்றாலும் அதற்கு மேல் எங்களால் ஒன்றும் செய்ய முடி யாதே! இன்று கல்விக்காக ஆயிரக் கணக்கில் செலவிடும் பல மாணவர்களைக் காண்கிறேன். ஆனால் அன்று பொதுவாக அத்துணைச் செலவு செய்தவர் இல்லை என்றே எண்ணு கிறேன். மேலும் என் அன்னையார் திங்களுக்கு இவ்வளவு பணம் என எண்ணி வரையறுத்துத்தான் கொடுப்பார்கள். பெரிய இடமாக வாடகைக்குப் பிடிப்பதென்பது இயலாது போயிற்று. மூன்று ரூபாய் வாடகை கொடுத்தோம். எப்படியோ புதுக்குடித்தனமும் புதுப்படிப்பும் நடந்து கொண்டே வந்தன. எங்கள் ஊரிலிருந்து அடிக்கடி யாராவது வந்து கொண்டே இருப்பார்கள். அவர்கள் வழி அம்மா தின்பண்டங்களையும் பிற தேவையான பொருள்களையும் கொடுத்து அனுப்புவார்கள். நாட்கள் இவ்வாறு கழிந்தன. ஒரு நாள் இரவு நான் உணவு கொண்டுவிட்டுத் திண் ணையில் என் நண்பர்களுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டே இருந்தேன்; நேரம் போவதே தெரியவில்லை. இரவு பத்து மணிக்கு மேலாகியிருக்கும். பாட்டி படுத்து ஒரு தூக்கம் துரங்கி எழுந்திருந்திருப்பார்கள். அவர்கள் வந்து என்னையும் மற்றவரையும் படுக்கச்சொன்னார்கள். நான் உள்தாழ்வாரத் தில் வந்து படுத்துக் கொண்டேன். ஏனோ தூக்கம் வர வில்லை. நெடுநேரம் விழித்துக்கொண்டிருந்தேன். சிறிது நேரம் எதை எதையோ எண்ணிக் கொண்டேயிருந்து அப்படியே உறங்கிவிட்டேன் என நினைக்கிறேன்.