பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 நிற்கும் நீ, உன் வாழ்நாளில் நீ வந்த வழியை நோக்கிப் பார்த்தாயா? எண்ணிப்பார் என்று கூறாது கூறினான். உண்மையில் எண்ணிப் பார்க்கத்தான் வேண்டும் என்ற உணர்வு தோன்றிற்று. மேட்டுப்பாளையத்திலிருந்து நாற்பதுகல் கடந்த இந்த மலைப் பாதையை நினைத்த என் மனம் என் வாழ்நாட் பாதையில் மைல் கற்களாக நாற்பது ஆண்டுகள் கழிந்து விட்டதை உணர்த்திற்று. ஆம். கடந்த நாற்பது ஆண்டுகள்-அறிவு தெளிவுபட்ட அந்த ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்திலிருந்து இன்று நாற்பது ஆண்டுகள் கழிந்துவிட்டன. என் அறிவறிந்த வாழ்வுப் பாதையில் கடந்த நாற்பது ஆண்டுகளில் நான் கண்ட காட்சிகள், பெற்ற அனுபவங்கள்-வாழ்வின் மேடுபள்ளங்கள் - எத்தனை எத்தனை வேறுபாடுகள்-அளவில! அவை அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாகப் படமெடுத்துக் காட்டுவன போன்று வந்து வந்து சென்றன. அந்த ஐந்து வயதை எட்டும் நாளில் அங்கம்பாக்கத்தில் இருந்த நாள் தொட்டு இன்று இதோ உதகையின் உச்சியில் இருக்கும் நாள் வரையில் என் வாழ்வில் ஏற்பட்ட மாறுதல்கள் பலப் பல. என் வாழ்வைப் புறநோக்காகக் காண்பவர்கள் ஏதோ மகிழ்ச்சியிலே பிறந்து மகிழ்ச்சியிலேயே வளர்ந்த ஒருவ்ன் நான் என்று கணக்கிட்டு விடுவார்கள். எப்பொழுதும் சிரிப்பு நீங்காத முகமுடையவன்' என்று உற்றவரும் பெரிய வரும் என்னைப் பற்றிக் கூறுவார்கள். என்றாலும் என் வாழ்வுப் பாதையை நோக்கினால் யாரும் சிரிக்க வழி இருக்காது என்னலாம். துன்ப எல்லையில் நின்று கொண்டே-எதிரே தெரியும் இன்பத்தை எட்டிப் பிடிக்கலாம் என்ற எண்ணத்தோடே-கழிந்த மைல்கள் பல. ஒருபுறம் பள்ளத்தாக்கை வைத்துக்கொண்டே உயரிய உதகை உச்சி யைப் பிடித்த புகைவண்டியைப் போன்று நானும் அன்று தொட்டு இன்றுவரை முயன்று கொண்டுதான் வருகிறேன். புகைவண்டிக்கு வழிகாட்ட-வளைந்து குழிந்து நெளிந்து செல்லும் பாதையை விளக்க-வண்டியிலே பெட்டிக்கு ஒருவ ராகக் கொடியேந்தி நிற்பதோடு, வழியிடையெல்லாம் நிலையத்துள்ளவர்கள் நிறுத்தி நிறுத்தி, வேண்டிய அறிந்து, வேற்று வண்டி வழியிடை முட்டா வகையில் வழி செய்து தொல்லையில்லாமல் காத்து வழியனுப்புகின்றனர். எனது வாழ்வுப் பாதையில் அவ்வாறு வழிகாட்டிகளாக உற்றவரும் உதவுபவருமாகப் பேசத் தக்கவர் இல்லை எனினும் ஏதோ புண்டைய அறிஞர்கள் விட்டுச் சென்ற வாய் மொழிகளையே