பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 ஆனந்த முதல் ஆனந்த வரை நான் அலறிக் கண் விழித்தேன். பக்கத்தில் பாட்டி உட்கார்ந்து கொண்டு என்னைத் தட்டிக்கொண்டிருந்தார்கள். நான் எழுந்து உட்கார்ந்து கொண்டேன். நான் ஏதேதோ சொல்லிக் கூச்சலிட்டதாகவும், என்னை எழுப்பவே பாட்டி அருகில் வந்து உட்கார்ந்து தட்டியதாகவும் கூறினார்கள். என்னை என்ன? என்று கேட்டார்கள். அப்போது விடியும் நேரம் ஆகிவிட்டது என்று அறிந்தேன். வீட்டுக்கார அம்மா வும் அவர்கள் பிழைப்பாகிய இட்டிலி சுட்டு விற்கும் வேலைக்காக எழுந்துவிட்டார்க்ள். பாட்டியார் நான் ஏன் அலறினேன் என்று கேட்டார்கள். ஏதோ பயங்கரக்கனவுகள் கண்டேன் என்றும் அந்தப் பயத்தில் கூச்சலிட்டேன் என்றும் உண்மையைக் கூறினேன். என்னை எழுந்து கைகால் கழுவிக் கொள்ளச் செய்து, திருநீறு இட்டு மறுபடியும் படுத்துக் கொள்ளச் சொன்னார்கள். நான் முன்னாள் இரவு நெடுநேரம் தெருவில் பேசிக்கொண்டு இருந்தமையால் தெருவில் எதையோ கண்டு பயந்திருப்பேன் என அவர்கள் நினைத்து விட்டார்கள். நான் மறுபடியும் படுத்துக் கண்ணை மூடினேன். உறக்கம் வருவதாக இல்லை. ஏதேதோ நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தன. என் தந்தையார் இறந்த நினைவு வந்தது. வீட்டில் தாயார் தனியாக இருப்பார்களே என்ற எண்ணமும் பிறந்தது. அவர்களைப்பற்றிக் கண்ட கனவே என்னை அப்படி நடுங்க வைத்தது. என் தாயார் அடிக்கடி வீட்டில் சொல்வதுண்டு. ஏதாவது வீட்டிலோ, ஊரிலோ கெடுதல் நேருமாயின் அதை அவர்கள் முன் கூட்டியே கனவினாலோ, பிற வழியாகவோ அறிவார்களாம்! நானும் அன்று கண்ட கனவை அப்படி ஏதாவது நிகழுதற்கு முன் எச்சரிக்கையோ என எண்ணிப் பயந்தேன். - நாங்கள் செங்கற்பட்டுக்கு வந்துவிட்ட பிறகு விட்டில் தனியாக என் அன்னையார் இருந்தார்களல்லவா! அவர்கள்