பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் - 121: படாடோப வாழ்வுக்காகப் பலர் பஞ்சாயத்துத் தேர்தலில் தொடங்கிப் பாராளுமன்றத் தேர்தல் வரையில் போட்டி யிட்டுப் பணத்தைப் பணமென்று பாராது செலவிடுவதைக் காண்கிறோம். தர்மகர்த்தாவானால் பலவித செளகரியங் களைத் தங்களுக்கும் தங்களைச் சார்ந்தவர்களுக்கும் செய்து கொள்ளும் வாய்ப்பு இருக்குமானால் ஏன் அவர்கள் போட்டி இட மாட்டார்கள்? அதிலும் ஒரே இனத்தவர் என்று கூறிக் கொண்டு தம் வீட்டு விழாக்களில் ஒன்றிக் கலந்துண்ணும் அவர்கள் இக் கோயிலால் இரண்டு பட்டார்கள் என்றால் அதனிடம் அவர்கள் கொண்டுள்ள மோகத்தை என்னென்பது? இன்று கோயில்கள் அரசாங்க உடைமையாகிவிட்டன. அதற்கென அலுவலாளர்களை நியமித்துவிட்டு மேற்பார்வை செய்வர். அந்த நாளிலோ அத்தகைய ஏற்பாடுகள் கிடையா. ஊரில் உள்ளவர்கள் தங்களுக்குள்ளாகவே ஒருவரை அதற்குத் தர்மகர்த்தராகும் பதவிக்குத் தேர்ந்து வைத்து, அவர்கள்வழி கோயிலை ஆள வேண்டும். அதனால்தான் அத்துணைப் போட்டியும் போரும் உண்டாயின என்னலாம். என்றாலும் ஒரே இனத்தவராகக் கூறிக் கொண்டு, இப்படிக் கொலை அளவு செல்லும் கோயில் விவகாரத்தை பெருக்கச் செய்து வாழும் நெறி அநாகரிக நெறிதானே. عمه எப்படியோ எங்கள் ஊரில் இந்தப் போட்டியும் வலுவடைந்துவிட்டது. தெருவில் அடிக்கடி சண்டை நடப்பதும் உண்டு. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். எங்கள் ஊரில் அந்தப் பழ மொழி மெய்யாகாவிட்டாலும், சேரி வாழும் மக்களுக்கு அது கொண்டாட்டமாகவே இருந்தது என்னலாம். வேளாளர் தம்முள் மாறுபட்டால் மாற்றானை ஏசவும் பேசவும்--ஏன்? -அடிக்கவும் கூட அந்தச் சேரி வாழ்வோரை அழைக்கும் வழக்கத்தில் அவர்கள் ஒருபடி உயர்ந்தவரானார்கள் என்ன லாம். அவர்களை-பாவம்-முன்னிறுத்தி வேளாண் குடி