பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 123 ஆனாலும் ஊரில் பெரும்பாலான நிலம் பெரிய கட்சியாருக்கே உரிமையாக இருந்தது. ஆகவே அவர்கள் யாரும் நில சம்பந்தமான வேலைகளைச் செய்யச் சேரியாரை வைத்துக் கொள்ளவில்லை. நிலத்தில் உழவும் அவர்களை விடவில்லை. தாங்களே முன்னின்று ஏர் ஒட்டவும் துணிந்துவிட்டனர். இந்த நிலை சேரி வாழ்மக்கள் உள்ளங்களில் புது உண்ர்ச்சியை அளித்தது. இன்று நாட்டில் நாம் காணும் கிசான்' போராட்டங்கள் அன்று கிடையா! உழுபவனும் நிலக்காரனும் பண்பின் வயப்பட்டு ஒன்றிக் கலந்தே வாழ்ந்தார்கள். அவர் களுக்குள் பிணக்கும், சட்டமும், நீதி மன்றமும் பிற வேறு பாடுகளும் கிடையா! எனினும் எங்களூரில் உள்ளுர்க் கலகத்தில் சேரிவாழ் ஏழைமக்கள் சேரத் துணிந்தார்கள். ஊரில் உள்ள பெரிய கட்சி முதலிமார்களெல்லாம் ஒரு நாள் தத்தம் வயலில் தாமே ஏர் கட்டி உழத் தொடங்கி னார்கள். தூரத்தே சேரியார் நின்று கண்டுகொண்டே இருந்தார்கள், பாவம்; அவர்கள் மேல் பிழை இல்லை. பின்னால் சிறிய கட்சியைக் சேர்ந்த முதலியார் ஒருவர் அவர் களைத் தூண்டினார். அவர்கள் வயிலுள் புகுந்து உழுது கொண்டிருந்தவரை அடித்தும் கத்தியால் கீறியும் பலவகைத் துன்பம் செய்து ஏர்களை அவிழ்த்தும் உழாமல் செய்து விட்டார்கள். அன்று காலை நிகழ்ந்த இச் சிறு வினைப் பொறி இரவில் பெருநெருப்பாக மூண்டுவிட்டது. ஊரில் உள்ள பெருந் தலைகள் ஒன்றுகூடின. தம்மை அவமானப்படுத்தியவரை ஊரிலேயே வாழவிடக் கூடாது என நினைத்தார்களோ என்னவோ, அனைவரும் அன்றிரவே அதற்குக் கழுவாய்த் தேட முயன்றனர். யார் யார் முன்னின்றார்கள்; எவ்வெவ்வாறு சூழ்ச்சி செய்தார்கள் என்பனவெல்லாம் எனக்குத் தெரியாது. எப்படியோ அன்று இரவு ஊரே போர்க்களமாகிவிட்டது என்று சொன்னார் கள். நான் அன்று அங்கு இருந்திருப்பேனாயின் அலறிப் புடைத்து அல்லலுற்றிருப்பேன். அந்தப் பயங்கர இரவில்,