பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. பிரம்படி மதுரைச் சொக்கநாதர் செய்த அறுபத்து நான்கு திருவிளையாடல்களுள் பிரம்படிபட்ட திருவிளையாடலும் ஒன்று. அன்று எப்படி நடந்ததோ நாமறியோம். ஆனாலும் இன்றும் மதுரைவாழ் மக்கள் ஆவணி மூலத்தன்று அத் திருவிழிாவினைக் கண்ணாரக் கண்டு களிக்கின்றனர். ஆம்! அனைத்துக்கும் அப்பாற்பட்ட ஒரு பெருந் தெய்வமாம் சொக்கேசன் அடியவர் பொருட்டு உருத்தாங்கி வந்து பிரம்படிபட்ட வரலாறு புராணத்தில் உள்ளது. ஆனால் நான் பிரம்படிபட்ட வரலாறு நாட்டில்-பள்ளியில்-பயிலும் அனைவரும் சாதாரணமாகப் பெறும் வரலாறே யாகும். செங்கற்பட்டு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் காலத்தில் எனக்குப் பிரம்படி கிடைத்தது. அந்தப் பிரம்படி என் வாழ்வையே மாற்றிவிட்டது என்றுகூடச் சொல்லலாம். அதுவே நான்பெற்ற முதல்-இறுதிப் பிரம்படியாகும். ஆயினும் அந்தப் பிரம்படி எனக்கு ஒழுக்கங் கற்பித்தது என்னலாம். - • நான் மேற்படிப்பிற்கு வெளியூர் சென்றால் ஒருவேளை கெட்டுவிடுவேன் என்ற எண்ணத்தில்தான் என் தாயார் மேல் படிப்பே வேண்டாம் என்று என்னைத் தடுக்க நினைத்தார் கள். நான் யாதொரு கட்டும் காவலும் இல்லாது விடப்படு வேனாயின் ஒருவேளை கூடுவாரோடு கூடிக் கெட வழியுண்டு. என நினைத்தார்கள். இன்றும் எத்தனையோ நல்ல பிள்ளைகள் கூடிய நண்பர்தம் கூட்டுறவால் தம்மை மறந்து, தம் நிலை மறந்து தளர்ந்து வாடுவதைக் காண்கிறோம். இந்த நிலையில் தன் ஒரு குலத்துக்கு ஒரு மைந்தன் கூட்டாளி களின் கைப்பொம்மையாகக் கூடாது எனக் கவன்றார்கள் அன்னையார். எனினும் நான் கட்டாயம் படிக்க வேண்டும் என்று கருதிய காரணத்தினாலேயே தனியாகப் பாட்டியுடன் கூட்டிச் செங்கற்பட்டிற்கு அனுப்பினார்கள். காஞ்சிபுரம்