பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 127 அச்சமும், மற்றொருபால் மதிப்பும் வளர்ந்துவர வாய்ப்பு இருந்தது. அன்று என்னுடைய வீட்டுப்பக்கத்தில் இருந்து வரும் நண்பர்களெல்லாம் பகல் உணவுக்காக வீடு சென்று விட்டார்கள். நான் மட்டும் ஏனோ பள்ளியிலேயே தங்கி விட்டேன். காரணம் நன்கு புலப்படவில்லை; மறந்தேன். ஒருவேளை என் பாட்டியார் அன்று ஊருக்குச் சென்றிருந் தார்களோ என நினைக்கிறேன். ஊருக்குச் செல்லவேண்டி இருந்தால் பாட்டியார் சாதம் பிசைந்து வைத்துவிட்டு முன்னாள் மாலை சென்று மறு நாள் மாலை வந்து வழக்கம் போல் சமையல் செய்வார்கள்; அன்றும் அப்படித்தான் என நினைக்கிறேன். எனக்குச் சரியாக நினைவு இல்லை. காலையில் தயிர்ச் சோறு உண்டு பள்ளிக்கு வந்துவிட்டேன். பகல் வேளையில் பக்கத்தில் உள்ள கடையில் ஏதேனும் பழம் வாங்கிச் சாப்பிட இருந்தேன். எனவே என் நண்பர்களோடு பகல் உணவுக்கு நான் வீட்டுக்குச் செல்லவில்லை. பள்ளியில் நான் அறியாமலேயே வேறு சிலருடன் சிநேகம் செய்துகொண்டேன். அவர்கள் வேறு பகுதிகளி லிருந்து வந்தவர்கள். என்னுடன் ஒருசேர வரும் மாணவர்கள் அனைவருமே நல்லவர்கள். அவருள் ஒருவர் மட்டும் அந்த வயதிலேயே பொடி போடக் கற்றுக் கொண்டார். என்றாலும் அவர் மற்றவரை அந்தத் துறைக்கு அழைத்தது கிடையாது. அவரும் மறைவாக அத் துறையில் வல்லவ ராகிச் சிறந்தார், என்றாலும் என் புது நண்பர்கள் - அப்படிப்பட்டவர்கள் அல்லர். அவர்கள் பீடி முதலிய புகை குடிக்கும் பழக்கம் உடையவர்கள். எப்படியோ அவர்களுடன் நான் நட்பாளனானேன். வேடிக்கையாக என்னையும் அவர்கள் பீடி முதலியன பிடிக்கத் தூண்டினார்கள். ஒருவன் ஒரு நாள் என் வாயிலேயே பீடித் துண்டைத் திணித்துப் பிடிக்குமாறு வற்புறுத்தினான்; நான் திணறினேன்.