பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 ஆனந்த முதல் ஆனந்த வர்ை அவர்கள் செயல் அப்பொழுது எனக்கு அவ்வளவு கொடுமை யாகப் படவில்லை. அவர்களை என் நல்ல நண்பர்களாக நான் கருதினமையால் அவர்கள் செய்வதை நானும் செய்வதில் தவறில்லை என்றுதான் அன்று நினைத்திருப் பேன். என்றாலும் அதுபோன்ற கெட்ட வழக்கங்களில் செல்ல எனக்கு மனம் வரவில்லை. எப்படியோ அவர் களோடு சில வேளைகளில் தனியாக விளையாடிப் பொழுது போக்குவது உண்டு. அன்று இடைவேளையில் அப்படித்தான் அவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். அவர்கள் வகுப்பறையிலே கூடப் பீடி பிடித்திருப்பார்கள் என நினைக்கிறேன். நானும் அவர்களுடன் இருந்தேன். தலைமை ஆசிரியருக்கு ஒவ்வொரு பையனைப் பற்றியும் நன்கு தெரியும். அவர் என்னை அவர் களுடன் சேரவேண்டாமென்பதைக் குறிப்பிட்டுள்ளார் என நினைக்கிறேன். அன்று அவர்களோடு நான் சேர்ந்திருப் பதைக் கண்டுவிட்டார். அவர்கள் செய்யும் குற்றங்களெல் லாம் அவருக்குப் புரிந்தனவே. வகுப்பறையில் கூட்டமிட்டுக் கொண்டு இருந்தார்கள்; கூடவே புகை பிடித்திருக்கலாம். எனக்கு இப்போது நினைவு இல்லை. அவர்கள் கூச்சல் தலைமை ஆசிரியர் காதுக்கு எட்டி இருக்க வேண்டும். அவர் நாங்கள் இருக்கும் அறை வாயிற்படியில் வந்து நின்றார். நான்தான் முதற் பலகையில் உட்கார்ந்திருந்தேன். வா' என்று அதட்டினார். மற்றவர்களை அவர் கவனித்தாரா, அன்றிக் கவனித்து விட்டுவிட்டாரா என்பது இன்றும் எனக்குப் புரியவில்லை. என்னை அழைத்துக்கொண்டே சென்றார். அதற்குள் பிற்பகல் இடைவேளை முடிந்து வகுப்புத் தொடங்கும் நேரம் வந்துவிட்டது. மாணவர்கள் வரிசை வரிசையாக வந்துகொண்டே இருந்தார்கள். அவர் களுக்கு இடையில் நிறுத்தி ஓங்கி ஒரு பிரம்படி கொடுத்தார். மற்றவர்களைப்பற்றியும் என் உடனிருந்து கூச்சல் எழுப்பிய வரைப் பற்றியும் அவர் கவனிக்கவில்லை. என்னையும் என்ன