பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 135 இன்றியும், சேட்பார் இன்றியும், உதவுவார் இன்றியும் என்னை விட்டுவிட்ட அந்தக் கடவுளை நினைத்தாலும், அனைத்திலும் கைகொடுத்து 'அஞ்சேல் என ஆதரிக்கும் தன்மையில் என் அன்னையார் எனது துன்பம் துடைக்க நிற்பதை அறிந்து உள்ளம் தேறினேன். ஆனால் என் அன்னையின் துன்பத்தை ஆற்றுவார் யார் என்றே என் உள்ளம் கேட்டுக்கொண்டே இருந்தது. அப்போதுதான் கோயிலுக்குச் சென்று திரும்பி வந்துகொண்டிருந்த பாட்டியார் எல்லாம் அவன் செயல், நம்மால் ஒன்றுமில்ல்ை' என்று யாரிடமோ கூறிக்கொண்டே உள்ளே நுழைந்தார்கள். ஆம்! என் அன்னையாரும் அந்த எண்ணத்திலேயே யாருடைய உடன் உதவியும் இன்றி என்னைத் தான் வாழும் வரையில் காத்து ஓரளவு வாழ்வில் உயரவழி செய்து வைத் தார்கள். அவர்களை நினைக்கும் போதெல்லாம் அந்தப் பாட்டும் என்னைவிட்டு அகலுமோ! 22. விபூதிச் சாமியார் அன்று பள்ளிக்கூடத்தில் ஏதோ சிறப்புவிழா. எங்கள் பள்ளிக்கூடம் மாலை 3 மணிக்கே மூடப்பெற்றது. மறு படியும் ஐந்து மணிக்குக் கூட்டம் என்றும் அதற்கு நாங்கள் திரும்பி வரவேண்டு மென்றும் தலைமை ஆசிரியர் சொல்லி இருந்தார். நாங்கள் எங்கள் வீடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றோம். மாணவர் அனைவரும் மாலைக் கூட்டத்துக்கு வரவேண்டும் என்று கூறி இருந்தபோதிலும் ஒரு சிலர்தான் அக்கூட்டத்திற்கு வரப் புறப்பட்டனர். எங்கள் தெருவி லிருந்து நானும் என் நண்பர் திருவேங்கடமும் மட்டுமே வீட்டிலிருந்து கூட்டத்திற்குப் புறப்பட்டோம். ஆனால் நாங்கள் பள்ளிக்கூடம் சென்று சேரவில்லை. கூட்டத்திலும் பங்கு கொள்ளவில்லை.