பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 எழுந்தது. காலை சிற்றுண்டிக்குப் பின் புறப்பட்டதால் திரும்ப நண்பகலாகிவிட்டது. என்றாலும் கதிரவன் வெம்மையை வீசுவதற்குப் பதில் என் உள்ளத்தில் பல விளைவுகளை வீசி என்னைத் திரும்பிப் பார்க்கத் தூண்டி விட்டான். ஆம். திரும்பி வந்துகொண்டிருக்கும் காலையில் தான் என் சிந்தனை நீண்டது. இளமையின் நினைவுகளும் பிற நிகழ்ச்சிகளும் ஒன்றன் பின் ஒன்றாக உள்ளத்து எழுந்தன. இந்நினைவுகளை உணர்த்திய அந்நெடுங்குன்று 'நிலைத்து வாழ்க’ என வாழ்த்துகிறேன். தத்தம் வாழ்க்கை வரலாற்றைப் பல பெரியவர்கள் மேலை நாட்டில் எழுதியுள்ளனர். அண்ணல் காந்தியடிகளார் போன்ற நம் நாட்டுப் பெரியவர்களுள் சிலரும் எழுதியுள்ளார் கள். அவர்தம் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது நாம் எத்தனை எத்தனையோ உண்மைகளை உணர்ந்து கொள் கிறோம். ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றைக் கூறும் போது அதில் எத்தனையோ இடர்ப்பாடுகள் உள. நல்லதை யும் பொல்லாததையும் அப்படியே கூற வேண்டி இருக்கும். நல்லவரையும் அல்லவரையும் காட்டவேண்டியிருக்கும். அதனால் வேறுபாடுகளும் மாற்றங்களும் உண்டாகலாம். அவற்றையெல்லாம் கட்ந்து இனிய முறையில் வாழ்க்கை வரலாற்றை எழுதுபவர்கள் மிகச் சிலரே. இது என் வாழ்க்கை வரலாறு அன்று; அவ்வாறு என் வரலாற்றை எழுதத் தேவையும் இல்லை; அதனால் பயன் பெறுவாரும் இருக்க மாட்டார்கள்; எனினும் இளமையில்எனது பதினாறாம் ஆண்டு வரையில்-நான் பெற்ற சில அனுபவங்களையே இந்த இளமையின் நினைவுகள் வழி வெளியிட நினைத்தேன். அந்நினைவில் மலர்ந்ததே இந்நூல். இந்நூல் வருங்காலத்தை உருவாக்கும் வகையில் இளைஞர்களுக்கும் தமிழ்நாட்டு வாழ்வை வளப்படுத்த முன் நிற்கும் நூல் நிலையங்களுக்கும் பெரிதும் பயன்படும் என்ற துணிபுடையேன். இந்நூல் வெளிவருங்கால் ஒப்பு நோக்கி உதவிய செல்வர் அ. திருமலை முத்துசாமி அவர்களுக்கு என் நன்றி. இந்நூல் மறைந்த மனைவி சந்திராமணி -முதலாண்டு நினைவுநாள் வெளியீடு. உக்கல் . 30-12-58 Ф}• (p. Ш.