பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 - ஆனந்த முதல் ஆனந்த வரை உங்களுக்கு இந்தத் திருநீற்றையும், குங்குமத்தையும் கொடுக்கச் சொன்னார். இதை நீங்கள் அணிந்து கொண்ட மையால் உங்களுக்கு எல்லாக் குறைகளும் இனி இல்லை யாகும்’ என்றார். நைந்து நைந்து வாடி வாழும் என் உள்ளத்துக்கு அவர் சொன்ன சொற்கள் நன்கு ஆறுதல் தருவது போன்றே இருந்தன. துன்ப எல்லையில் நின்று எதோ அமைந்து வாழும் நான் அதை வேறு எப்படி எடுத்துக் கொள்வேன்? பல புராணங்களில் வருந்தி நைந்து வழிபடு பவருக்கு ஆண்டவன் இந்த வகையில் அருள் புரிந்ததாக நான் பல கதைகள் படித்திருக்கிறேன். நெடுங் காலத்துக்குப் பின்-நல்லறிவு பெற்றபின், அந்தக் கதைகள் அத்தனையும் அப்படியே கொள்ளத்தக்கன அல்ல என்னும் உண்மையை உணர்ந்தேன் என்றாலும் அந்த இளம்வயதில் அந்த உணர்ச்சி இல்லை. எதோ அடியார்கள் உண்மையில் அருள் பெற்றவர்தாம் என நினைத்தேன். அதனாலேயே வருந்தும் நிலையில் இருந்த என்னைக் காப்பாற்ற ஆண்டவனே அவரை அனுப்பினார் என்று அவர் தம்மைப் பற்றிக் கூறியதை உண்மையெனக் கருதின்ேன். என் நண்பனும் அப்படியே கருதினான், ஆயினும் நாங்கள் பேச இயலாது வாயடைத்து நின்றோம். - இதற்கிடையில் அந்தச்சாமியாரே பேசத்தொடங்கினார். 'நான் ஒன்றும் செய்யமாட்டேன். ஆண்டவன் கட்டளையிட்ட படியே நான் உங்களுக்குத் திருநீறும், குங்குமமும் கொடுத்து விட்டேன். நான் வெகு தொலைவில் இருந்து இதற்காக வந்தேன். வறிதே இப்போது எப்படி அவ்வளவுதூரம் போவது என நினைக்கிறேன்' என்றார் அவர். நான் அவரை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு சென்று சோறு அளிக்கலாமா என நினைத்தேன். இப்படி ஆண்டவனால் அனுப்பப்பட்ட வராயின் அவருக்கு எதுதான் சித்திக்காது' என்று நினைக்கத் தெரியவில்லை எனக்கு. பாவம் அவர் பசியோடு வந்திருப்ப