பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 ஆனந்த முதல் ஆனந்த வரை நேர்ந்தாலும் அந்தப் பக்கம் செல்வதில்லை. சென்றால் எப்படியும் அழைத்து உட்கார வைத்து ஊர்க் கதைகளை யெல்லாம் சொல்லி ஒரு நாளைப் போக்கிவிடுவார். அப்படிப் பட்டவர் திடீரென்று வீட்டில் நுழையவே நான் அன்றைக்கு யாரும் பேச்சுக்குக் கிடைக்கவில்லை போலும், வீட்டில் வந்து வீண் வீம்பு அளக்கப் போகிறார் என நினைத்துக் கொண்டேன். நான் நினைத்தது வீண் போகவில்லை. ஏதேதோ அளந்தார். கடைசியாக ஒரு சிறு மூக்குத்தியைக் காட்டி இது உன்னுடையது தானா? பார் என்று அம்மா விடம் நீட்டினார். அம்மாவும் ஆம் என்றார்கள். அவர் அது வந்த வரலாற்றையும் அதுபற்றித் தான் காட்டிய தீரச் செயலையும் பெருமையாகக் கூறி, அந்த மூக்குத்தியைத் தந்ததால் மண்டகப்படிக்கு ஒரு ரூபாய் தர வேண்டும் என்று சொன்னார். அம்மாவும் பிறகு என்று சொல்லாது. அப்போதே கொண்டுவந்து கொடுத்தார்கள். பிறகு அவர் சென்றுவிட்டார். அவர் அந்த மூக்குத்தியைப் பற்றி அளந்த கதை, அதன் முழு விவரத்தையும் அறிய என்னைத் தூண்டி யது. அம்மாவை அது ப்ற்றிக் கேட்டேன். அவர்கள் முன்னமே அந்த வீண் பேச்சாளருடன் பேசிக் கொண்டிருந்த தால் பல வேலைகள் அப்படியே கிடக்கின்றனவென்றும், அவற்றை முடித்து மாலையில் எல்லாவற்றையும் சொல்லுவ தாகவும் சொன்னார்கள். குழந்தைகள் கதை கேட்க ஆவல் கொள்வது போலவே என் உள்ளத்திலும் ஏனோ அக்கதை யைக் கேட்க வேண்டுமென்ற ஆவல் தோன்றிற்று. மாலை எப்போது வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன். மாலைப்பொழுது வந்தது. அம்மா எல்லா வேலையும் முடித்துக்கொண்டு வந்தார்கள். நானும் உட்கார்ந்தேன். அவர்கள் மூக்குத்திக் கதையைச் சொன்னார்கள். இரண்டு வருடங்களுக்கு முன், என் தந்தையார் வாழ்ந்த காலத்தில்