பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 147 னாலும் அந்தத் தெளிநீர் கலங்காது. அத்தெள்ளிய நீரில் சுமார் ஒன்றரை அடி ஆழமுள்ள அந்தப் பள்ளத்தின் மத்தியில் அடியில் மின்னிக்கொண்டு அந்த உருத்திராக்கம் காட்சி தந்தது. என் மகிழ்ச்சியை யாரே அளவிட வல்லார். இழந் ததைக் கண்ட மகிழ்ச்சி ஒரு புறம், நம்முடையதாயின் எப்படியும் கிடைக்கும் என்ற அன்னையின் தளரா உறுதி ஒரு புறம் என்னை ஈர்த்தன. ஒடினேன் வீட்டுக்கு. அன்னை யிடம் கொடுத்தேன். அவர்கள் மகிழ்ந்தார்கள். கண்ணிர் பெருக்கினார்கள், உழைப்பு வீண் போகாது, என்றும் உரிய வரைச் சேரும் என்றார்கள். ஆம்! அவர்கள் சொற்படி, அவர்கள் காட்டிய மேலே கண்ட இரு சான்றுகள் வழி நான் இன்றுவரை இயன்ற அளவு உழைத்துத்தான் வருகின்றேன். அன்னை அருளும் உடன் நிற்கின்றது என்ற துணிவில் பணியாற்றுகின்றேன். . 24. சோடா புட்டி வருத்தப்பட்டுச் சம்பாதிக்கிற நம் பொருள் என்றைக் காயினும் எங்கே சென்றாலும் நம் கைக்கு வந்துசேரும் என்று அம்மா அடிக்கடி சொல்வது மேற்கண்டபடி இரு சமயங்களில் மெய்யானதை அறிந்தேன். அப்படியே நமக்கு உரிமை அல் லாததை, விரும்பி ஒருவர் கொண்டு வந்து கொடுப்பதாயி னும் சொந்தமல்லாததை எடுத்துக் கொள்ளுதல் நமக்குத் தீமையாகத்தான் முடியும் என்பதையும் கண்டு கொண்டேன். ஏதோ ஒரு சிறு வேலை செய்வதற்காக-நமக்கு உரிமையல் லாத வேலையைச் செய்வதற்காக-பிறர் உபகாரமாக ஏதாவது கொடுத்தாலும் அதை நான் ஏற்றுக் கொள்ள லாகாது என அம்மா அடிக்கடி சொல்லுவார்கள். அதுவும் மெய்யானதை அன்றொரு நாள் கண்டேன்.