பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 151 கள். அவர் "ஆம்" என்று கூறி அரை ரூபாய் கொடுத்து மற்ற வரை விரட்டிய தன் பெருமையை மறுபடியும் அம்மாவிடம் சொன்னார். சொல்லிப் புறப்பட எழுந்தவர் அந்தச் சோடா புட்டிகளை அம்மா பக்கம் நகர்த்தி உங்களுக்காக வாங்கி வந்தேன். நாளை காலியானதும் நானே எடுத்துக் கொண்டு சென்று கொடுத்து விடுகிறேன்’ என்றார். அம்மாவுக்குக் கோபம் வந்தது. யார் உங்களை இதை வாங்கி வரச் சொன்னது? கைக்கூலியா இது? வேண்டாம் எடுத்துக் கொண்டு போங்கள் என்று கோபத்தோடு சொன்னார். அவர் மெள்ள நழுவி விட்டார் என்றே சொல்ல வேண்டும். அம்மாவிற்குச் சற்றுத் தளர்ச்சி இருந்தால் அவர்கள் அடிக்கடி பழம், சோடா முதலியவற்றை வாங்கி வைத்துக் கொண்டு உண்டு வருவார்கள். ஆகவே அதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார் அவர். அன்றைக்கு வாலாஜா பாத்தில் சோடா இரண்டு பை, கலர் நான்கு பை என்று மிகக் குறைந்த விலையில் விற்றது. ஆகவே அவர் வாங்கி வந்த அனைத்தும் சேர்த்தாலும் மூன்று அணாக்கள்தாம். அவர் கணக்கப்பிள்ளை எழுதாததால் வந்த பத்து ரூபா லாபத்தில் எனக்கு மூன்றணா செலவிட்டால் என்ன என் எண்ணி இருப்பார். ஆனால் அந்த சாட்சிக்காக வந்த வனுக்கு ஒரு ரூபாய்கூடக் கொடுக்க அவர் விரும்பவில்லை. அம்மா அந்தச் சோடா புட்டிகளை அப்படியே எடுத்து வைத்தார்கள். என்றாலும் ஒன்றிரண்டை உடைத்து யாரோ வந்தவருக்குக் கொடுக்கச் சொன்னார்கள். ஆயினும் அம்மா மனத்தில் நிம்மதி இல்லை. இதோ இந்த மூன்றணா சோடாவுக்குப் பதில் நமக்கு இரண்டு மடங்காக ஏதாவது நட்டம் வரும் பார்' என்று சொல்லிக் கொண்டே இருந்தார் கள். நம் வேலை பத்திரம் எழுதுவது அல்ல. அந்த வேலையே செய்து பிழைக்கும் கணக்கப் பிள்ளையோ மற்றவரோ வேண்டுமானால் கைக்கூலி பெறலாம், நாம்