பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னையைப் பற்றி" தாயானாள்-துகினைவால் என்றன் சுகங்காண இன்பம் அடைந்திடுவாள் துன்பம் அகற்றிஎனைச் சோபிப்பாள்-அன்புளத்தில் ஒர்மகனாய் கின்றனன்றன் உயர்வேதன் வாழ்வாகச் சீர்புவியில் வாழ்ந்திடுநற் செல்வமவள்-பேரான செல்வம் எனக்கெனவே சேர்க்கத்தன் இன்பமெலாம் ஒல்லாவே என்று ஒதுக்கியவள்-எவ்வாறும் நான்மகிழ்ந்தால் தான்மகிழ்வாள் நன்மனத்தில் வாழ்வுற்றுத் தேன்.இனிக்கும் தீஞ்சொல்லைச் செப்பிடுவாள்-மாறான ஒன்னார் தமக்கிளையா உள்ளத்தளாய் கின்று எங்காளும் என்னுயிர்க்கு இன்பமளி-பொன்னான நற்கருணை கொள்வாள் கலஞ்சிறந்து என்னைவளர்த் துற்றவனாய்ப் போற்ற உறுதிசெய்தாள்-பெற்றவளே தானாய் இருந்தாலும் தங்தைபோல் கல்விநலம் வேண அளித்தென்னை வித்தகனாய்-நானிலத்தே எல்லாரும் போற்ற எழிலுடையனாக்கினாள் பொல்லாங்கைப் போக்கிக் குருவானாள்-கல்லாளாய் ஐந்து பெருங்குரவர் ஆனாளே யாய்கின்ற விஞ்ச நலமளிக்கும் மேதக்காள்-எஞ்சாத நற்றாய் நல்லம்பலவன் நற்கோயில் பொற்கரைமேல் உற்று எனைக்கான உன்னுவாள்!

  • 1939இல் காஞ்சியிலிருந்து பாலாற்று வெள்ளத்தினைப்

பாராட்டி எழுதிய வெள்ளம் விடுதுரதி'ன் சில அடிகள்