பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 ஆனந்த முதல் ஆனந்த வரை தற்போது அவர்கள் பெயரால் :மீனாட்சி கவின்கலைக் கல்லூரி என்ற ஒன்றைத் தொடங்க ஏற்பாடு செய்துள்ளது. இதில் இன்றும் வீணை, நடனம், வாய்ப்பாட்டு முதலிய வகுப்புகள் (வள்ளியம்மாள் பள்ளியின் சார்பில்) நடைபெறு, கின்றன. செங்கற்பட்டில் என்னுடைய பள்ளிப் படிப்பு முடிந்தது. அப்போது எனக்கு வயது பதினேழுதான். எனது பள்ளிப் படிப்பின் முடிவில், என் இளமைமுதல் அதுவரை உற்ற துணையாக இருந்து வந்த என் பாட்டியார் காமாட்சி அம்மையார் அவர்கள் மறைந்தமை எனக்குப் பேரிடியாக அமைந்தது. நான் பள்ளி இறுதித் தேர்வை முடித்துவிட்டு, ஊருக்குச்சென்று அன்னையாருடன் சிலநாட்கள் தங்கி இருந்தேன். அடுத்து இரண்டொரு நாட்களில் செங்கற் பட்டிற்குச் சென்று எல்லாச் சாமான்களையும் எடுத்துக் கொண்டு பாட்டியையும் அழைத்துவர ஏற்பாடு. ஆனால் அதற்குள் செங்கற்பட்டில் பாட்டியார் நலிவுற்றிருப்பதாக ஆள்வந்தது. ஒடினேன்-அவர்கள் உணர்விழக்கா நிலையில் இருந்தாலும் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. அன்னையும் நானும் அவர்களை ஊருக்கு அழைத்துவந்தோம். எனினும் இரண்டொருநாளில்-சித்திரை அமாவாசை நாளில் அவர்கள் எங்களை விட்டுப் பிரிந்தார்கள். என் அன்னையாருக்கும் பிறகு எனக்கும் உறுதுணையாக இருந்து எங்கள் குடிமுழுதும் ஒம்பிய தெய்வமாக விளங்கிய பாட்டியார் மறைவு என்னா லும் என் அன்னையாலும் தாங்கிக்கொள்ள முடியாததாகி விட்டது. என் பாட்டியாருக்கென (அம்மாவுக்கு அத்தை) தனிக் குடும்பமோ மக்களோ வாழ்வில் இல்லையாதலால் எனக்காகவே வாழ்ந்து, என் பள்ளிப் படிப்பு (பிறகு முறை யாகப் பயிலவில்லை) முடியும் வரையில் தம் வாழ்வைத் தியாகம் செய்த அந்தத் தியாகச்சுடரின் மறைவு என்றும் மறக்க முடியாததாகும்.