பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 உள்ளத்திலும் எழத்தான் செய்தது. எனினும் என் அன்னையார் இருவர் பிரிந்தமையும் வேறு பிற நிகழ்ச்சிகளும் என்னை இதை எழுதி வெளியிடத் தூண்டின என்பதோடு, பிற காரணங்களை முன்னுரையிலும் காட்டியுள்ளேன். என் அன்னைக்கு என் ஊரின் பக்கத்திலேயே நிலைத்த நினைவுச் சின்னம் ஏற்படுத்த வாங்கிய நிலமும் (நூலில் குறிக்கப் பெற்றது) தற்போது என்வசம் இல்லை. எனவே இன்று அண்ணாநகரில் உள்ள அன்னையின் பெயரால் அமைந்த அறப்பணியினைச் செம்மையுறச் செய்தால் போதுமானது என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் அதற்கும்தான் எத்தனை இடர்ப்பாடுகள்? நாற்பது ஆண்டுகளுக்கு முன் நான் வாழ்ந்த காஞ்சி வாழ்க்கையின் கூறுகள் சிலவற்றை இங்கே சுட்டிக்காட்டி யுள்ளேன். அக்காலத்தில் வேறு நிகழ்ச்சிகள் பலவும் இன்று என் கண்முன் நிழலிடுகின்றன. எனினும் பத்தாண்டுகளுக்கு முன் எழுதியதை மாற்றியோ கூட்டியோ குறைத்தோ வெளி யிடக் கூடாது என்ற எண்ணத்திலே இந்த அளவில் இந்த நூலை உங்கள் முன் வைக்கின்றேன். காலம் நமக்கென நிற்பதில்லை. நிகழ்காலம் என்ற ஒன்றே இல்லை என்று அறிஞர்கள் கூறும் அளவுக்குக் காலம் விரைந்து செல்லுகிறது. செல்லுகிறது' என்று முடிப்பதற்குள் அந்தநிலை இறந்தகாலமாகி விடுகிறது. இவ்வளவு விரைந்து செல்லும் காலச் சூழலுக்கிடையில் கடந்த காலத்தை நினைப் பது ஒரு மகிழ்ச்சிக்குரிய செய்கையாகவே அமைகின்றது. பல்வேறு நிகழ்ச்சிகள் துக்கம் தோய்ந்தவையாக இருந்தாலும் மனிதன் அதனுள்ளேயே மூழ்கி இருந்து தன் காலத்தையெல் லாம் வீணாக்காது, சிறிது சிறிதாகத் தெளிவு பெற்று, சமூகத் தோடு தன்னை இணைத்துக் கொண்டு எப்படி எப்படி மாறி வாழக் கற்றுக் கொண்டான் என்பதையும் இந்த நினைவால்