பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 169 ஒன்றும் செய்ய முடியவில்லை. நான் பள்ளி இறுதி அரசாங்கத் தேர்வில் பொதுக்கணக்கில் 100க்கு 100ம் சிறப்புக் கணக்கில் 100க்கு 92ம் எடுத்திருந்தமையின், ஆசிரியர்கள் என்னை மேலே படித்து, பொறியாளராக வரு மாறு பணித்தனர். ஒரு சிலர் என் அன்னையிடம் வந்தும் கூறினர். எனினும் அவர்கள் மேலே படிக்க வேண்டிய தில்லை என்று திட்டமாகக் கூறிவிட்டனர். நான் அவ்வாறு படிப்பதாயின் பண உதவி தரமுடியாது என்றும் சொல்லி விட்டனர். எனவே அந்த வயதில் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதென்பது என்னால் முடியவில்லை. அதே வேளையில் என் மணம் பற்றிய ஊரார் ஏச்சும் பேச்சும் எனக்கு வேதனை தந்தன. அன்னையாரும் அந்த வேதனையைப் பெற்றார் என்றாலும், நான் அவரைவிட்டுப் பிரியக்கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருந்தனர். அப்போதுதான் சிதம்பரத்திலிருந்து பிரகாசானந்தா என்ற துறவி எங்கள் ஊருக்கு வந்து சேர்ந்தார். அவர் ஊரில் வந்து சில நாட்கள் தங்கியிருந்தார். அப் போது பலர் அவரிடம் நெருங்கிப் பழகினார்கள். முதியரும் இளையரும் அவருடன் பழகினர். நான் ஏனோ சற்றே விலகியே இருந்தேன். அவர் உண்மையில் துறவியாக இருந்த தோடு நன்கு பயின்றவராகவும் இருந்தார். அவரை ஊரில் ஒவ்வொருவரும் ஒருநாளைக்கு ஒருவேளை தத்தம் வீட்டில் உணவருந்த அழைத்தனர். அப்படியே என் அன்னையும் அவரை என் வீட்டில் உணவுக்கு அழைத்திருந்தனர். அவர் வீட்டில் கால்வைத்த வேளையே என் வாழ்வுப் பாதையின் திருப்பு மைய வேளையாக அமைந்தது என்பதை அப்போது நான் அறியேன். என்னிடம் நேராகப் பேசாவிடினும், அவர் மற்றவர் களிடமிருந்து என்னைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். நான் பள்ளியிறுதி வகுப்பில் தேர்ச்சிபெற்று, மேலே படிக்க