பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 171 றேனோ இல்லையோ, அத்தமிழ் என் ஆக்க வாழ்வைச் சிறக்கச் செய்கிறது. எனது முந்திய பாதை வழியே சென்றிருந்திருப்பேனாயின் ஒருவேளை நான் தற்போது எங்கேனும் பொறியாளனாகப் பணியாற்றிக் கொண்டிருந் திருப்பேன், அத்துறையில் உயர்வெய்தியிருப்பேனோஅன்றித் தாழ்நிலையில் இருந்திருப்பேனோ? ஆனால் என் அன்னைத் தமிழ் உலகுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தது. பிரகாசானந்த அடிகள், அன்னையின் மனம் நோகாவண்ணம், வீட்டிலேயே இருந்து படிக்கலாம் என்று கூறினார். ஆயினும், நுழைவுத் தேர்வுக்குப் பிறகு, நான் கல்லூரியில் சேர்ந்தே படிக்கவேண்டும் என்ற நிலை உண்டாயிற்று. நூல்களைப் பெற்று உரிய விண்ணப்பங்களையும் அனுப்பிய பிறகுதான் நூல்களைப் படிக்கத் தொடங்கினேன் பள்ளியில் பயிலும்போது கணக்கில் சிறந்தவனாக இருந் தேனேயன்றி, தமிழில் சாதாரண மாணவனாகவே இருந் தேன். எனவே தமிழை நன்கு தெளியக் கற்கமுடியவில்லை. என்றாலும் சில காலம் எங்கள் ஊரிலேயே தங்கிய அடிகள் சில பாடங்களைச் சொல்லிக் கொடுத்தார்கள். தேர்வுக்கு முன் சில நாட்கள் சிதம்பரம் சென்றால் அங்கே மடத்தில் தங்கிப் பயிலலாம் என்றார்கள். எப்படியோ அவர் வாய் மொழி கேட்டும் அவர் காட்டிய வழியைப் பின்பற்றியும் அந்த நுழைவுத் தேர்வில் சிறக்க எழுதி வெற்றி பெற்று விட்டேன். எனவே அடுத்த ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயில வேண்டும். அன்னை அதற்கு முதலில் இணங்கவில்லை என்றாலும் முடிவில் இசைவு தந்து வற்றாத கண்ணிருடன் என்னை வழியனுப்பி னார்கள். நானும் சிதம்பரம் சென்று தமிழ் மாணவனாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கால்வைத்துப் பயில்த் தொடங்கினேன்.