பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை - 179. ளுடன் சேரிக்கு வந்துவிட்டான். அவன் அப்பல்கலைக் கழகத்தே பணிசெய்யும் உயர்ந்தார் ஒருவர் மகன் என அறிந்தேன். கடைசிவரையில் இராது சற்று முன்னே திரும்பி விட்டான் அவன். நாங்கள் எங்கள் பணியினை முடித்துத் திரும்பும்போது, அவனுடைய பெற்றோர்கள் அவனைத் தெருக்கம்பத்தில் கட்டிப்போட்டு, தலையில் சாணத்தால் 'அபிஷேகம் செய்துகொண்டிருந்தனர். சேரியில் சென்றமை யால் அவன் கெட்டுவிட்டான் என்றும், அவனைத் தூய்மைப் படுத்தவே அச்செயல் செய்யப்படுகிறது என்றும் சொன்னார் கள். நாங்கள் நைந்தோம்-அடிகளார் உள்ளம் வெந்தது. அவர்தம் சீர்திருத்தக் கருத்தை வெறுக்கும் வகையிலும் கண்டிக்கும் முறையிலும் அவரை, அவ்வூரில் சிவன் கோயிலில் உள்ள நல்ல குடிதண்ணீரை எடுக்கவிடாது தடுத்தனர். அவர் அதற்கெலாம் கலங்காது-உப்பு நீரையே உண்டு, பயன் படுத்தி, அண்ணாமலை நகரில் வாழ்ந்து வந்தார். அவர்தம் உயர்ந்த தோற்றமும் உயர்ந்த கல்வி அறிவும் தூய காவி உடையும் மெய்ம்மைத் துறவுநிலையும் யாழ்ப்பாண ஒலியிய லுடன் பேசும் தெய்வத்தமிழும் எங்களையும் உயர்த்தின. தற்போது அவர் பிறந்த ஊரில் அவருக்குச் சிலை எடுப்ப தறிந்தேன். அங்கு வெளியிடப்பெறும் மலருக்கு நான் அண்ணாமலையில் அவரடியின் கீழ் இருந்து பெற்ற அனுபவத் தையே தீட்டி அனுப்பினேன். . அந்த ஆண்டின் இறுதியில் அவர்கள் பல்கலைக் கழகத் திலிருந்து விலகுகிறார் என்ற செய்தி எங்களைத் துன்பத்தில் மூழ்க வைத்தது. தமிழுக்கென அவரை அண்ணாமலை அண்ணல் வருந்தி அழைத்து வந்து ஏற்றுப் போற்றினார் என அறிந்தேன். எனினும் அவர் தொடர்ந்து இராமல் செல்வது வியப்பாகவே இருந்தது. தமிழுக்கென அமைந்த அப் பல்கலைக் கழகத்தில் ஏனோ அன்று தொட்டு இன்றுவரை. தமிழ்த்துறைத் தலைமை ஏற்கும் பெரியார்களெல்லாம்