பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 ஆனந்த முதல் ஆனந்த வரை ஏதோ ஒருவகைக் கசப்போடு வெளியேறுகிறார்கள் என்று எண்ணிப் பார்க்கிறேன். விடை கிட்டவில்லை. அடுத்த ஆண்டு நாவலர் சோமசுந்தர பாரதியார் தமிழ்த் துறைத் தலைமை ஏற்றார். அவரும் உயரத்தில் அடிகளாருக் குச் சளைத்தவரல்லர். இவருடைய போக்கும் நிலையும் அவரினும் மாறுபட்டுத் தோன்றினும் தலைமைக்கு ஏற்றவர் என்றே அனைவரும் கூறினர். இவரும் அண்ணாமலை அரச ரால் விரும்பி அழைத்து வரப்பெற்றவர் என அறிந்தேன். இவரைத் தவிர்த்து மற்றவர்களெல்லாம் நான் முன் காட்டிய ஆசிரியப் பெருந்தகைகளே. அவர்கள் வழிகாட்ட நாங்கள் உண்மையில் மாணவர்களாகவே இருந்து கற்றோம். என்னுடன் தமிழ் பயின்ற மாணவர்களுள் ஒருசிலர் இன்னும் நினைவில் உள்ளனர். வாழ்விலும் சிலர் கலந் துள்ளனர். சோமசுந்தரம் என்பார் பெருமழைப் புலவராக உள்ளார். மற்றொரு சோமசுந்தரம் தஞ்சை மாவட்டத்தில் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகின் றார். வன்மீகநாதன் புதுக்கோட்டைக் கல்லூரியில் முதல்வ ராக உள்ளார். இவ்வாறே இன்னும் சிலர் உள்ளனர். தமிழ் ‘எம்.ஏ. வகுப்பும் அதுபோது அங்கே சிறந்திருந்தது. திருவாளர்கள் சரவண ஆறுமுக முதலியார், அ. சிதம்பரநாத செட்டியார், ஆலாலசுந்தரனார், சோதிமுத்து, மீனாட்சி சுந்தரம், முத்துசிவம் போன்றார் அதுபோது எம்.ஏ. வகுப்பில் பயின்று வந்தனர், முதலாண்டில் அவர்களோடெல்லாம் அதிகமாகப் பழகும் வாய்ப்பினைப் பெறவில்லை என்றாலும் ஒரளவு அவர்களை அறிந்திருந்தேன். அடுத்த இரண்டாம் ஆண்டிலே அவர்களோடெல்லாம் நெருங்கிப் பழக வாய்ப்பும் வசதியும் ஏற்பட்டன. முதலாண்டு மெளனசுவாமி மடத்தில் தங்கியிருந்த நான் அடுத்த ஆண்டு பல்கலைக்கழகத்தைச் சார்ந்த இலவச விடுதி யில் (old block) இடம்பெற்றேன். அவ்விடத்தில் தற்போது இசைக் கல்லூரியும் விருந்தினர் விடுதியும் ஓங்கி நிற்கின்றன.