பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 181 அங்கே எனக்கு அறிமுகமான நண்பர் பலர். உணவு மட்டும் பொதுவிடுதியிலே ஆதலால் பல அன்பர்கள் அறிமுகமாயினர். பல்கலைக்கழகக் கூட்டங்கள் பலவற்றிலும் பங்குகொண் டேன். பாரதியார் இல்லத்திற்கு அடிக்கடி செல்வது வழக்கம். அவரும் என்னை அவர் மகன் எனவே போற்றிப் புரந்தார் அவர்தம் இளம்பெண்கள் இருவருடனும் விளையாடிப் பொழுதுபோக்குவேன் நான். அதைக்கண்ட பாரதியார், நான் பல்கலைக்கழகத்தை விட்டு வரும்போது அப்பிள்ளை களின் புகைப்படத்தை எனக்கு அன்பளிப்பாக ஈந்தார். (அந்த இருவரில் ஒருவரே மருத்துவத்துறையில் சிறந்தவராகஉயர்ந்தவராக சென்னை மருத்துவப் பல்கலைக்கழகத் துணை வேந்தராகப் பணிபுரிந்த திருமதி லலிதாகாமேஸ்வரன் என்பவராவர்). ~ இரண்டாம் ஆண்டில் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேரவ்ை யின் அமைச்சனாகப் பணியாற்றினேன். திரு. அ. சிதம்பர நாதனார் தலைவர். எங்கள் கூட்டங்களில் பேராசிரியர்கள் பாரதியார், சேதுப் பிள்ளை, வரலாற்றுப்பேராசிரியர் சீனிவாசாச்சாரியார் போன்றவர்களும் பிறதுறைப் பேராசிரி யர்களும் பங்குகொண்டு எங்களை ஊக்குவிப்பர், பல அறிஞர் கள் எங்கள் பேரவை நிகழ்ச்சிகளில் பங்குகொண்டனர். முன் காட்டிய காக்கா பிடித்தல் கற்றறிந்தார்க் காகாது' என்பன போன்ற பல தலைப்புக்களில் பேராசிரியர்களே பேசுவர். அவ்வாண்டின் தமிழ்ப் பேரவைப்பணி சிறக்கநடைபெற்றது. அப்பேரவையின் ஆண்டு விழாவிற்குத் திரு. தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் வாழ்த்தியல் விரிவுரையாற்ற வந்தார். நானே சென்னை சென்றபோது நேரில் கண்டு அழைத்து ஏற்பாடு செய்தேன். முந்திய புலவர் வரிசையின் அடுத்த வாரிசாக அவர்வந்து அழகிய சொற்பொழிவாற்றினார். அதுதான் அவர் அண்ணாமலையில் ஆற்றிய முதற்பணி என எண்ணுகிறேன். பிறகு அங்கேயே பேராசிரியராகப் பணி