பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 ஆனந்த முதல் ஆனந்த வரை யாற்றி, அங்கிருந்தே மதுரைப் பல்கலைக்கழகத் துணை வேந்தராகும் பேறு பெற்றார். அவரை அன்று முதல் இன்று வரை நான் உற்றவராகவே போற்றுகின்றேன். அவர் துணை வேந்தரான பின் முதல் வெளிவந்த என் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சியை அவருக்கே முதல் தமிழ்த் துணைவேந்தர் என்ற பெருமிதத்தில் உரிமை யாக்கினேன். அவர் தொண்டு சிறப்பதாக என வாழ்த்தி மேலே செல்கிறேன். இரண்டாம் ஆண்டில் பல வாழ்க்கை அனுபவங்களைப் பெற்றேன். விடுதி வாழ்க்கை எத்தகையதென அறிந்தேன். என்னினும் முதிர்ந்தோரான-அறிவில் சிறந்த ஆறுமுக முதலியார், ஏ. சி. செட்டியார் ஆகியோருடன் நெருங்கிப் பழகி அவர்தம் அறிவுரைகளைப் பெற்றேன். அந்த ஆண்டில் நடைபெற்ற நாள்மங்கலவிழாவில் தமிழகப் புலவர் பெரு மக்கள் அனைவரும் வந்திருந்தனர். இராகவையங்காருடைய 'பாரி காதை அப்போது அரங்கேறிற்று. அன்று வந்த அத்தனைப் பெரும்புலவரையும் பேரவையின் சார்பில் பாராட்டி, புகைப்படமும் எடுத்துக்கொண்டோம். அது இன்னும் என்முன் தொங்கவிடப் பெற்றிருக்கின்றது. அந்த ஆண்டில் நான்பெற்ற மற்றொரு அனுபவம் என் தனி வாழ்வைப் பற்றியது. நான் மணம்புரிந்தும் துறவியைப் போல் வாழ்ந்தேன் என மேலேயே கூறினேன், இருதார மணத் தடுப்புச் சட்டம் இல்லாத காலம் அது. எனவே என் அன்னையர் இருவரும் எனக்கு மறுமணம் செய்விக்க நினைத்தனர். நானும் அவ்வாறே நினைத்ததுண்டு. என்னை மணந்தாரை, அவர் விரும்பியவரையே மணக்க ஆவன செய்து, நானும் வேறொருவரை மணந்து கொண்டால் என்ன என்று எண்ணுவதுண்டு. அதற்கேற்ற சூழலோ என்னுமாறு ஒரு நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்தது. வேறு துறை யில் பயின்றவர் ஒருவர் அடிக்கடி என்னுடன் பேசி, பரிவு