பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 ஆனந்த முதல் ஆனந்த வரை நடையிலேயே உட்காரப் பணித்தார். எல்லாவற்றையும் முடித்துவிட்டு, என்னையும் அழைத்துக்கொண்டு மேலே சென்றனர். என்னை உட்காரவைத்து, தம்பி! என்ன நினைக் கிறாய்?" என்றார். நான் எது பற்றி என்று அறியாது திகைத் தேன். என் திகைப்பை உணர்ந்த ஐயரவர்கள் நான் பாத்திரங்களை எடுத்து வைத்ததைப்பற்றி என்ன நினைக் கிறாய்? என்று கேட்டு, என் பதிலுக்குக் காத்திராமல் அவர் களே பேசத் தொடங்கினர். நம் வீட்டு வேலை எதுவாயினும் நாம் செய்யப் பின் வாங்கக்கூடாது எனவும் நாம் பணி செய்வதில் இழிவு இல்லை என்றும் கூறினார். மேலும் பல வகையான அறிவுரைகளை அந்த இளம் வயதில் என் உளங் கொள்ளுமாறு எனக்குக் கூறினர். அதுவரை எதிரில் உட்கார்ந்து, தம்மை மறந்து ஏட்டில் மூழ்கியிருந்த திரு. கி.வா.ஜ. அவர்கள் என்னை யாரென்று கேட்டார். பிறகு என்னைப்பற்றிக் கூறிவிட்டு, வேண்டிய நூல்களைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டேன். பிறகு ஐயர் அவர்கள் வாழ்ந்த வரையில் சென்னைக்குச் சென்ற போதெல்லாம் அவர்களைக் கண்டு அவர்தம் வாழ்த்தைப் பெற்று வந்தேன். பின் அவர் மகனாரும் அவர்தம் பேரப் பிள்ளையாகிய இன்று வாழும் திரு. சுப்பிரமணிய ஐயர் அவர்களும் என்பால் அன்பு காட்டி வருகின்றனர். அவர்தம் அன்பால் ஐயர் அவர்கள் பெயரால் அமைந்த நூல் நிலையத்தில் ஆட்சிப்பொறுப்பின் உறுப்பின ராகவும் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். பல்கலைக் கழகத்துக்குப் படிக்கச் சென்ற நான்- நான் காண்டுகள் படித்து முடிக்காது -இடையிலே இரண்டாண் டில் விட்டுவந்த செயல் விநோதமானது. ஒரு ஆய்வுப் பொருளின் காரணமாக-கொள்கை விளக்க அடிப்படையில் எனக்கும் என் மதிப்புக்குரிய ஆசிரியர் கந்தசாமியார் அவர் களுக்கும் மாறுபாடு ஏற்பட்டது. எங்கள் தர்க்கம் சற்றே மிஞ்சிய நிலையில் துறைத்தலைவர் பாரதியாருக்கு எட்டியது.