பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 185 அவர்களுக்கு நான் எவ்வளவு வேண்டியவனாயினும் கல்லூரி யில் தனிச்சலுகை கிடையாது. எனவே என்னை அழைத்துச் சற்றே வன்மையாகக் கண்டித்தனர். பிப்ரவரி மாத இறுதி யில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தச் சூழ்நிலையில் நான் மேலும் தொடர்ந்து பயில விரும்பவில்லை. எனவே அப்போது துணைவேந்தராக இருந்த சர். எஸ். இ. அரங்க நாதன் அவர்களை நேரில்கண்டு என் கருத்தைக் கூறினேன். பலவகையில் பல்கலைக் கழக நிகழ்ச்சிகளில் தொடர்பு கொண்டவனாதலின் என்னை அவர்கள் நன்கு அறிந்திருந் தனர். என்னை மறுநாள் வரப்பணித்தார்கள். பிறகு பாரதி யாருடன் கலந்து பேசினார்கள். எனக்கு மறுநாள் துணை வேந்தர் அவர்களே சொல்லி அனுப்பி ஆறுதல் கூறினர். மேலும் தேர்வு மிக அண்மையில் இருப்பதால் அப்போது பல்கலைக் கழகத்தை விட்டுச் செல்ல வேண்டாமென அறிவுரை கூறினர். நான் மறுபடியும் மற்ற மாணவருடன் தலைதாழ்த்தி உட்கார முடியாத நிலையினை விளக்கவும் அவர்கள் விலக்கு ஒன்று தந்தனர். அதுமுதல் நான் வகுப் பிற்குச் செல்ல வேண்டா மெனவும் இருந்து தேர்வு மட்டும் எழுதலாம் எனவும் பணிந்தனர். அந்த நல்ல முடிவை ஏற்று அப்படியே அங்கிருந்து தேர்வு எழுதி முடித்து வீடு திரும்பினேன். இடையில் இருந்த ஒரு திங்களில் பலமுறை பாரதியார் வீட்டுக்குச் செல்வேன். பலபொருள்களைப் பற்றிப் பேசும் என்னுடன் ஒருமுறையாவது நடந்த நிகழ்ச்சியினையும் வகுப்புக்கு வராததையும் பற்றிக் கேட்டதே இல்லை. அவர் தம் பெருந்தன்மையை எண்ணி மனமாரப் போற்றினேன். பிறகு தேர்வை முடித்து வீடுதிரும்பும்போது மறுபடியும் நான் பயில வருவதைப்பற்றி அவர்கள் ஒன்றும் கேட்க வில்லை. அவர்தம் இளங்குழந்தைகளின் புகைப்படங்களைத் தந்து அனுப்பினர். எல்லா ஆசிரியர்களிடத்தும் விடை