பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



1. தாத்தாவின் கதைகள்

க்காலம் என்னை நான் நன்றாக அறிந்து கொள்ளாத காலம். வயது ஐந்துக்கும் கீழ்ப்பட்டிருக்கும். பெற்றோர் மடியில் இருந்து, தலைவைத்துப் பொழுதுபோக்கிய காலம் என்னலாம். நான் எனது தாய்ப்பாட்டனார் வீட்டிலேயே இருந்துவிட்டேன். என் தாத்தாவுக்கு என் தாயாரும் பெரியம்மாவுமே இரு குழந்தைகள். ஆதலால் அவர்கள் இருவருக்கும் கலியாணம் செய்து வீட்டிலேயே தங்க வைத்துக் கொண்டார்கள். எனவே நானும் என் தாத்தா வீட்டிலேயே வளர்ந்தேன். அந்தத் தாத்தாவுக்கு நான் ஒருவனே பேரன். ஆதலால் என்னை நன்றாகச் சீராட்டிப் பாராட்டிப் போற்றி வளர்த்து வந்தார்கள். அவர்கள் சாப்பிடும்போது நானும் உடன் சாப்பிடவேண்டும். அவர்களுக்குக் கல்கண்டு கொடுத்தால் எனக்கும் பங்கு உண்டு. காப்பி நான் அந்தக் காலத்தில் குடித்தேனா, இல்லையா என்பது திட்டமாக நினைவுக்கு வரவில்லை; என்றாலும் வெய்யில் சுவரிலிருந்து கீழ் இறங்குவதற்குள், அதாவது காலை ஒன்பது மணிக்குள், நானும் தாத்தாவும் சாப்பிட்டு விடுவோம். தாத்தாவுக்கு அப்படி ஒன்றும் வயது அதிகம் இல்லையாயினும் காலை ஒன்பது மணிக்குள் சாப்பிடாவிட்டால் மயக்கம் வந்து விடுமாம். எனக்கு மயக்கம் வருகிறதோ இல்லையோ நானும் அவருடன் சாப்பிட்டு விடுவேன். இப்படி என்னை அறியாமலேயே என் இளமை கழிந்தது. தாத்தாவுக்கு ஒரு சிறு ஒற்றை மாட்டு வண்டி உண்டு. அவர் பக்கத்து ஊருக்கு வயல் பார்க்கச் சென்றாலும் வாலாஜாபாத்துக்கு வேறு சாமான்கள் வாங்கச் சென்றாலும்