பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 , ஆனந்த முதல் ஆனந்த வரை எனக்கு ஏழாம் வகுப்பிற்குத் தமிழும் வேறு சில வகுப்பு களுக்குச் சமயப் பாடமும் ஒரு வகுப்பிற்குக் கணக்கும் தரப் பெற்றன. அப்போது எங்களுர்ச் சேரியிலிருந்தும் சில மாணவர் நான் எடுத்த வகுப்பில் படித்தார்கள். மற்றவர் களைப்போன்று நான் அவர்களையும் ஒத்து நோக்கி, தேவை யானால் முதுகில் தட்டி, பாடங்கள் சொல்லித் தருவேன் இது எங்கள் ஊரிலிருந்து வந்து அதே பள்ளியில் படித்தும். பணியாற்றியும் இருந்த ஒருவருக்குப் பிடிக்கவில்லை, என் அன்னையாரிடம் சொல்லி என்னைக் கண்டிக்குமாறு செய்தார்கள். அன்னையார் கண்டிப்புக்கு அடங்கினேன். ஆயினும் எனது ஒருமை உணர்வு என்றும் விழிப்புடனேயே இருந்தது. எனக்கு அந்த உணர்வைத் தந்ததே இதே இந்து மத பாடசாலை தானே. இதில் இளமையில் சாதிபேத மற்றுப் பழகிய காரணந்தான், பின் சமுதாய ஏற்றத் தாழ்வைக் கண்டு நான் கலங்க வேண்டிய நிலையில் என்னைச் செலுத்தி, ஒரளவு சீர்திருத்தக்காரனாக மாற்றிற்று. எனவே அதே பள்ளியில் வேறுபாட்டைக் கற்பித்துக்கொண்டு என்னால் எப்படி வாழ முடியும்?மேலும் சேர்ந்த ஆண்டிலேயே அதே பள்ளியில் வேறுபாட்டைக் கற்பித்துக் கொண்டு என்னால் எப்படி வாழ முடியும்? மேலும் சேர்ந்த ஆண்டிலேயே அதே பள்ளியில் ஆசிரியர்களாகச் சேர்ந்த திருவாளர்கள் நா. ப. தணிகை அரசு, இராசவேலு முதலியார் போன்றோர் என் கொள்கைக்கு ஆதரவாக இருந்தார்கள். இந்துமத பாடசாலையில் நான் ஆசிரியனாக இருந்தேன் என்பதைக் காட்டிலும், நான் பல பாடங்களைக் கற்றுக் கொண்டதால், மாணவனாக இருந்தேன் என்பதே பொருந்துவதாகும். புதிதாகப் பாடம் சொல்லத் தொடங்கிய காரணத்தால் முன்னரே அனுபவம் பெற்ற நல்லாசிரியர் களை அடுத்து, நான் வகுப்பினை நடத்த வேண்டிய வழித் துறைகளை அறிந்து கொண்டேன். மாணவர்களாகிய இளஞ்செல்வங்களை அடிக்காதும் மிரட்டாதும் இனிய சாந்த