பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 193 எனக்கு முக்கியப்பணி கொடுத்திருந்தார்கள். அந்தநாள் முக்கிய நாளாகவே கருதுகிறேன். ஆம்! அன்றுதான் நான் தமிழ் முனிவர் திரு.வி.க. அவர்களை நேரில் கண்டு மகிழ்ந்தேன். அதற்குமுன் ஒருதடவை சென்னையில் கூட்டங்களில் கண்டிருக்கிறேனாயினும் அவரொடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு அப்போதுதான் ஏற்பட்டது. பிறகு ஓரிரு முறை அவர்கள் எங்கள் கிராமத்துக்கு வந்து என்னுடன் உறைந்துள்ளார்கள். குமரன் அச்சகம் புதுமனை புதுவிழாவில் நான் கட்டாயம் இருக்கவேண்டும் என்பது அன்புக்கட்டளை. ஆனால் அன்றுதான் என் பாட்டனார் ஆண்டுக் கடன். என் அன்னையாரும் மற்றவரும் அத்தகைய கடன்களை ஒழுங் காகச் செய்யவேண்டும் என்று நம்புபவர்கள். தற்போது நான் அச்சடங்குகளையெல்லாம் விட்டு வெறும் படையல்' மட்டும் மேற்கொள்ளுகின்றேனாயினும், அப்போது அவர் தம் சமய உள்ளத்துக்கு ஊறுசெய்யக்கூடாது என்று கருதிய காரணத்தால்-அதுவும் அவர்தம் பெற்றோருக்குச் செய்யும் கடன்கள் தவறலாகா என்ற உணர்வினால் அக்கடன்கள் கழிக்கும் சடங்கிற்கு மாறுபாடு சொல்வதில்லை. என் பாட்டன், பாட்டி இருவருக்கும் ஆண்பிள்ளைகள் இல்லை யாதலாலும் நான் ஒருவனே பேரப்பிள்ளையாதலாலும் நானே அக்கடமைகளைச் செய்யக் கட்டுப்பட்டவனானேன். எனவே அன்று குமரன் அச்சக விழாவிற்குப் போவதாபாட்டனார் சடங்கைச் செய்வதா என்ற கேள்விகளுக்கு இடையில் திண்டாடினேன். என் அன்னையார் அத் திண்டாட்டத்தைப் போக்கிவிட்டார்கள். காஞ்சிபுரம் செல் வதற்கு வாலாஜாபாத்தில் 6-45க்கு ரயில்; காஞ்சி நிகழ்ச்சி ? மணிக்கு. எனவே அதில் சென்றால் போதும். அதற்கு ஊரில் 5.30க்குப் புறப்படல் போதுமானதாகும். ஆகவே ೨. ஆண்டுக்கடன் சடங்குகளை முடிக்க ஏற்பாடு ஆ-13 -