பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 ஆனந்த முதல் ஆனந்த வரை செய்துவிட்டனர். மூன்று ஐயர்கள் விடியற்காலை மூன்று மணிக்கே வந்துவிட்டனர். நான்கு மணிக்குச் சடங்குகள் முடிந்தன; ஐந்துக்குப் படையல் இட்டு, உண்டு 5-30க்குப் புறப்பட்டுவிட்டேன். பிறகு புதுமனைப்புகுவிழாவில் கலந்து கொண்டேன். இதை அறிந்த குப்புசாமி முதலியார் அவர் சள் என் அன்பைப் பாராட்டிப் போற்றினர். அன்று பக லெல்லாம் திரு.வி.க.வுடனும் பிற அன்பர்களுடனும் பொழுதைக் கழித்தேன். திரு.வி.க. அவர்கள் படிப்பை விடாது தொடரவேண்டும் எனவும் மேன்மேலும் வளரும் வாய்ப்பு உண்டு எனவும் எனக்கு அறிவுரைகூறி வாழ்த்தி னார்கள். பச்சையப்பர் கல்லூரியில் பணி ஏற்று வாழ்ந்த காலை, அவர்களை அடிக்கடி காணும்போதெல்லாம், IJól) ஆண்டுகளுக்குமுன் அவர்கள் வாழ்த்திய அந்தப் பெருநிலை என் நினைவுக்கு வரும். - இந்துமத பாடசாலையில் பணியாற்றிய காலத்தில் பல விடங்களில் சொற்பொழிவு செய்யச் செல்வது வழக்கம். சைவசித்தாந்த சமாசத்தில் நிலைபெற்ற தொடர்பு உண்டா யிற்று. அந்த ஆண்டு சமாச ஆண்டு விழா திருவதிகையில் நடைபெற்றது. அப்பரை ஆட்கொண்ட அருட்பெருந் தலத் தில்-திலகவதியாரின் தெய்வத்தொண்டு நடந்த சிறந்த தலத்தில்-நடைபெற்ற அந்த விழாவில் நானும் கலந்து கொண்டேன். எங்கள் பள்ளியிலிருந்து சில மாணவர்களை யும் உடன் அழைத்துச் சென்றோம். சமாசச் செயலாள ராகச் செம்மைப்பணி ஆற்றிய திரு. ம. பாலசுப்பிரமணிய முதலியார் அவர்கள் எழுதிய அப்பர் நாடகத்’தை அங்கே மாணவர் வழியே நடித்துக் காட்டினோம். கண்டவர் மகிழ்ந்தனர். அம் மாநாட்டில் பலர் எனக்கு அறிமுக மாயினர். நாடகத்தின் சிறப்பினைக் கண்டு அப்பா வா.தி. மா. அவர்கள் அதற்கு முதலாக நின்ற என்னைப் பாராட்டினர். அந்த ஆண்டு விழாவில் தலைமை ஏற்ற திரு. வி. க. அவர்கள் பாராட்டினையும் பெற்றேன்.