பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 - ஆனந்த முதல் ஆனந்த வரை அனைவரும் அறிவார்கள். நான் அனைவருடைய இரக்கப் பொருளாகக் காலம்கழித்து வந்தேன். அதற்கிடையில் இளஞ்சிறாருடன் பழகும் வாய்ப்பும் அன்பர்தம் ஆதரவான சொற்களும் என்னைத் தாங்கி வந்தன. பள்ளிப் பணியும் செம்மையாக நடைபெற்றது. இதற்கிடையில் என் அன்னையும் பெரிய அன்னையும் எனக்கு மறுமணம் செய்துவைக்க முயன்றனர். நான் திண்டாடினேன். என் நண்பர் சிலரை அவர்கள் அழைத்து எனக்குப் புத்தி கூறுமாறு சொன்னார்கள். ஒருசில நண்பர் கள் மாமியார் வீட்டுக் கொடுமைக்கு அவ்வாறு செய்து கொண்டாலும் தவறு இல்லை என்ற அளவுக்குப் பேசினர். எனினும் என் உள்ளம் அவ்வாறு செய்துகொள்ளத் தயங் கியது. ஆயினும் அவர்கள்-மாமியார் வீட்டார் உண்மையில் நான் மறுமணம் செய்துகொள்வதை விரும்புகிறார்களா என அறிய விரும்பியது. அதுபற்றி என் நண்பர்களிடம் கலந்து பேசினேன். சிலருடைய உதவியினால் ஒர் ஏற்பாட்டினை மேற்கொண்டேன். - என்னுடன் அண்ணாமலையிற் பயின்ற ஆறுமுகப்பெரு மாள் என்பார் தற்போது நெல்லையில் பணியாற்றுகின்றார். அவர் மூலமாக ஐம்பது மணஇதழ் அச்சிட்டு அனுப்ப ஏற்பாடு செய்தேன். பேருக்குக் குணமங்கலம் என்ற ஊரில் எனக்கும் ஒரு பெண்ணிற்கும் திருமணம் நடப்பதாக அவள் அண்ணன் அழைப்பதாகப் பத்திரிகை அச்சிட்டு அனுப்பச் சொன்னேன். எல்லாம் கற்பனையே. குணமங்கலம் என்ற ஊரும் கற்பனைப் பெயர் என்றே எண்ணினேன். ஆனால் அது தஞ்சையில் உள்ள ஓர் ஊரின் பெயராகிப் பெற்றவர்களுக்குப் பெருந்தொல்லை கொடுத்ததைப் பின்னர் அறியப் பெரிதும் வருந்தினேன். - பள்ளிக்கூட நாள் ஒன்றில்-அன்று வா.தி.மா. அவர் களோ பெரியவரோ இல்லை-அந்த இதழ் வந்து சேர்ந்தது,