பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 199 இதுபற்றிக் கலந்து ஆலோசித்தனர். நான் கற்பனையில் குறித்த அந்த ஊர் எங்குள்ளது எனத் தேட முயன்றனர். இருவர் வாலாஜாபாத் புறப்பட்டுவந்து, ரெயிலடியில் வந்து, அந்நிலையத்துள்ளாரை அவ்வூரைப் பற்றிக் கேட்டனர், அவர்கள் எல்லாவற்றையும் துருவித் துருவி ஆராய்ந்து அது போன்ற ஊர் எதுவும் ரெயில் எல்லையில் நிலையமாகக் கிடையாது என்று கூறிவிட்டனர். வேறு சிலர் அஞ்சல் நிலையம் சென்று ஆராய்ந்தனர் போலும். அங்கே உள்ள எல்லா ஊர்களையும் ஆராய்ந்து, குணமங்கலம் என்ற சிற்றுார் தஞ்சை மாவட்டத்தில் எங்கோ ஒரு மூலையில் இருப்பதாகக் கண்டனர். உடனே ஊருக்கு வந்து அன்னையாருக்கு அத் தகவலைச் சொன்னதுதான் தாமதம், உடனே அந்த ஊருக்குப் புறப்படவேண்டுமென்று கிளம்பி விட்டனர். யார் தடுத்தும் கேளாமல் தானே நேரில் வந்தாலன்றி நான் மனம் மாறமாட்டேன் என்றும் மணம் முடிந்துவிடுமென்றும் அதை எப்படியும் தடுக்கவேண்டும் என்றும் புறப்பட்டு விட்டார்கள். அவர்களுக்குத் துணையாக என் பெரிய தந்தையும் புறப் பட்டனர். எப்படியோ அஞ்சல், ரெயில் நிலைய அதிகாரி களைக் கொண்டு அந்த ஊரையும் வழியையும் அறிந்து மறுநாட்காலை அந்த ஊருக்குச் சென்று இருவரும் சேர்ந்தனர். குணமங்கலம் அழகான சோலை சூழ்ந்த சிற்றுாராம். அதில் அனைவரும் வேளாளரே வாழ்கின்றார்களாம். இவர் கள் சென்று அங்குள்ளவர்களை அப்பத்திரிகையைக் காட்டி, அத்தகைய திருமணம் ஏதாவது நடைபெறுகின்றதா எனக் கேட்டார்கள். அங்கேயும் என் அன்னையார் அழுத வண்ணமே இருந்திருக்கிறார்கள். அவர்களை அழைத்துச் சென்று ஆறுதல் சொல்லி மோரும் பழமும் பிறவும்கொடுத்து உண்ணச்செய்து பிறகு எல்லாத் தகவல்களையும் கேட்டறிந் தார்களாம். அங்குள்ளவர்களும் எங்களைப் போன்றே