பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை - 201 அந்த எண்ணம் விடவில்லை. மேலும் நான் கனவு கண்ட அந்த நல்ல ஊரிலுள்ள பெண் ஒருத்தியை அந்த வேளாண் குலத்தில் மணக்காவிட்டாலும், அதே மாவட்டத்தில் அத்த கைய வேளாளர் நிறைந்த ஊரில் பிறந்த பெண் ஒருத்தியை எனக்கு மருமகளாக்கிக்கொண்ட நிலையினை-என் மகன் மெய்கண்டானுக்கு மனைவியாக ஏற்ற நிலையினை-இன்று எண்ணி மகிழ்கின்றேன். விரைவில் அந்த ஊரைச் சென்று காண்பேன் என எண்ணுகின்றேன். ஊரே கொந்தளிக்கும் இந்த நிகழ்ச்சி அவர்களுக்கு எந் துணையும் மாற்றத்தை உண்டாக்காததோடு, நான் மறு மணம் புரிந்துகொள்வதில் மகிழ்ச்சிகொண்ட அவர்கள் நிலை கண்ட அனைவரும் என்னை உடனே மறுமணம் புரிந்து கொள்ளுமாறு வற்புறுத்தினர். நான் அந்த எண்ணத்தைத் தள்ளி வைத்துக்கொண்டே வந்தேன். - ஊரிலிருந்து வாலாஜாபாத் திரும்பி இரண்டொரு நாட்கள் நான் என் ஊர்சென்று அன்னையாரைக் காண வில்லை. எனக்கு அச்சம் ஒருபுறமும் கண்டு மன்னிப்புப் பெறவேண்டும் என்ற ஆசை ஒருபுறமும் எழுந்தன. அதற்குள் ஊரிலிருந்து பலர் என் புது மனைவியைக் காணச் சாரி சாரியாக வாலாஜாபாத் வந்தனர். அவர்கள் வழி எல்லாம் என் அன்னையாரின் அவலநிலை உணர்ந்தேன். உடனே என் ஆசிரிய நண்பர்கள் இருவரை உடன் அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றேன். சென்று தாழ்வாரத்தில் இருந்த பலகையில் உட்கார்ந்தேன். சோகமே உருவாக உட்கார்ந்திருந்த அன்னையார் அப்படியே வந்து கட்டிக் கொண்டு அழுதார்கள். ஊரே திரண்டுவிட்டது. நான் மணம் செய்துகொள்ளவில்லை என்று எவ்வளவோ சொல்லியும் அவர்கள் ஆறுதல் பெறவில்லை. அந்த நாளையும் அவர்கள் நிலையையும் இன்று நினைத்தாலும் நடுக்கம் உண்டாகின்றது. பிறகு ஒருவாறு தேற அனைவரும்.