பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 - ஆனந்த முதல் ஆனந்த வரை விடை பெற்றுச் சென்றனர். அன்னையார் அன்று இர வெல்லாம் என்னை மணம் பற்றிப் பலமுறை கேட்டு 'இல்லை என்பதை ஒருவாறு தெளிந்து அமைதியுற்றனர். வருந்தவேண்டியவர் வருந்தா நிலை கண்ட ஊராரும் உற்றாரும் எனக்கு மறுமணம் செய்துவைக்க வேண்டியதே முறை என்ற முடிவிற்கு வந்தனர். நண்பர் பலரும் என்னை வற்புறுத்தினர். என் அன்னையார் விரைவில் பெண்தேட முயன்றனர். நான் மறுபடி எங்கே உண்மையில் வேறு யாரையேனும் மணம் செய்துவிடுவேனோ என்று அச்சம். ஆனால் நான் சற்றே பொறுங்கள் என்று சொல்லி, வேண்டாம் என்னாது, அவர்கள் விழைவைப் பின் சிறிது காலத்தில் நிறைவேற்றலாம் என ஆறுதல் கூறினேன். அவர்களும் ஒருவாறு அமைந்தார்கள். இந்துமத பாடசாலையில் ஆசிரியராக இருந்தபோது நடைபெற்ற நிகழ்ச்சிகள் இன்னும் பலப்பல உள்ளத்தே உருண்டோடி வருகின்றன. அப்போது ஊரின் நடுவில் ஒரு சிறு அளவில் வள்ளலார் இல்லம்' என்ற விடுதி இருந்தது. சுமார் 15 அல்லது 20 பிள்ளைகளே அதில் தங்கியிருந்தனர். அவருள்ளும் பெரும்பாலோர் இலவசமாகச் சேர்க்கப் பெற்ற வரே. அந்த நாளில்தான் பெரியப்பா பஞ்சாட்சர முதலியாருடைய முயற்சியால் ஊருக்கு மேற்கேயுள்ள தோட்டங்கள் விலைக்கு வாங்கப்பெற்றன. அப்போது அங்க்ே ஒரே ஒரு பழைய ஒட்டுக் கட்டடம் இருந்தது. சிறு மாற்றத்துடன் இன்னும் அது இருக்கிறது என எண்ணு கிறேன். அப்பாவும் பெரியப்பாவும் விடுதியைத் தனியான அந்த இடத்துக்கு மாற்றத் திட்டமிட்டனர். விடுதி காப் பாளனாக இருக்குமாறு என்னைக் கேட்டனர். நான் என் நிலைத்த வாழ்வு எது என்று திட்டமிடாத அந்த நாளில் ஒத்துக்கொள்ளவில்லை. எனினும் அந்த ஆண்டே ஆசிரியப் பயிற்சியில் தேர்ச்சியுற்று அங்கேயே நிலைத்த பணியாற்றி