பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 207 வதற்காகத் திருப்பதிக்குச் செல்வதாகக் கூறினர். என்னையும் அவர்களுடனேயே வருமாறு கேட்டுக்கொண்டனர். எனினும் நான் முருகனை முதலில் கண்டபிறகுதான் பிற இடங்களுக்கு வரமுடியும் என்று சொல்லிவிட்டேன். எனவே அவர்கள் மேலும் வற்புறுத்தாமல் அவர் ஊர் முகவரி முதலியவற்றைச் சொல்லி, அங்கேயே வந்து தங்கி மடம் அமைத்துக்கொண்டு இருக்குமாறு கேட்டுக்கொண்டனர். (என் பிற்கால வாழ்விலும் எங்கள் மரபுடன் தொடர்பு கொண்ட ஒரு மடத்துக்குத் தலைவனாக இருக்குமாறு என் நண்பர்கள் வற்புறுத்தினார்கள். எனினும் அப்போதும் நான் அந்த வாழ்வினை மேற்கொள்ளவில்லை). என் உள்ளத்தில் உண்மையில் போராட்டம் நிகழ்ந்தது. கையில் வைத்திருந்த தாளில் எழுது கோலால் அவர் தம் முகவரியை வாங்கிக் கொண்டேன். இறைவன் வழிகாட்டினால் அப்படியே வருவ தாகவும் வாக்களித்தேன். நான் இறங்குமுன் அவர்கள் சிற்றுண்டி உண்டனர். எனக்கும் பக்தியோடு அதில் ஒருபகுதி தந்தனர். நானும் மறுக்காமல் ஏற்று உண்டேன். அவர்கள் என்ன நினைத்தார்களோ! நான் தணிகையில் இறங்குமுன் என்னிடம் ஒரு ரூபாய் காசைத் தயக்கத்தொடு நீட்டி வழிச் செலவுக்கு வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். நான் புன்சிரிப் போடு வேண்டாம் என்று சொல்லி, இறைவன் தேவை யைத் தருவான்’ என்று அவன் மலையைக் காட்டினேன் . அந்நேர வேளையில் இரெயில் அவன் சன்னதிக்கு நேராகக் கிழக்குத்திக்கில்-தெற்கில் இருந்து வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தது. நான் காட்டிய திசையில் திரும்பிய அவர் கள், கோயில் காட்சியை நேரே கண்டதும் திகைத்தனர். என்னிடம் கொண்ட அவர்கள் பக்தி அதிகமாயிற்று. நான் ஊர் பேர் அற்றவனாதலால் அவர்களால் தேட முடியாது என்ற காரணத்தால் அவர்கள் விலாசத்தை நினைவூட்டிக் கட்டாயம் அவர்கள் ஊருக்கு வந்து மடம் அமைக்குமாறு