பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 . - ஆனந்த முதல் ஆனந்த வரை வீட்டில் ஒய்வாக இருந்துகொண்டு பாடங்களை முறை யாகப் படித்துக்கொண்டிருந்த நாளில் என் பெரிய தந்தையார் அம்பலவாணர் திருக்கோயிலுக்கென ஊரின் மேற்கே ஒர் அழகிய மண்டபம் அமைத்தார்கள். என் 'இளமை நினைவுகளின் தொடக்கத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை ஞாயிறு விழாவினைப் பற்றியும் இறைவன் அம்மேலைத் தோப்பிற்கு எழுந்தருளுவது பற்றியும் குறித்திருந்தேன். அத்திருவிழாவுக்கெனவே இந்த மண்டபம் அமைக்கப்பெற்றது. அவர்கள் தம் முழு ஊக்கத்தையும் கொண்டு கட்டி, அடுத்த கார்த்திகையில் அங்கே விழாவை நடத்தவேண்டும் என்று பெருமுயற்சி செய்தனர். எனினும் இறைவன் திருவுள்ளம் வேறாக இருந்தது. வேலை நடந்து கொண்டிருக்கும்போதே அவர்கள் வாந்தி பேதி'யால் பீடிக்கப்பட்டு ஒரே நாளில் மறைந்துவிட்டார்கள். அவர்கள் மறைவு எங்கள் குடும்பத்துக்கு மேலும் பேரிடியாக அமைந்தது. என் தந்தையார் இறந்த பிறகு தனித்து நின்ற எங்கள் குடும்பத்துக்கு இருந்த ஒரே ஆண்துணையும் மறைந்தது. என் பெரிய அன்னையாரும் துயரே வடிவமாக நின்றார்கள். இந்நிலையில் எங்களை ஏய்க்கும் சிலருக்கு இது கொண்டாட்டமாகவும் அமைந்தது. எனினும் என் அன்னை யாரும், பெரியன்னையாரும் செயலாற்றிய திறத்தினால் நாங்கள் ஒருவாறு உயர்ந்தோம். நான் அதுபோது தக்க தொரு வயதைத் தொட்டுக்கொண்டிருந்தேன். என்றாலும் பெற்றோரின் கீழ் அடங்கிய பிள்ளையாதலின் அதிகமாக உலக விவரங்களை அறிந்துகொள்ளவில்லை. நல்ல வேளை எங்கள் இருவருடைய நிலங்களும் குத்தகைக்கு விடப் பட்டிருந்தன. குத்தகைக்காரர்களும் நல்லவர்களாகவே அமைந்த காரணத்தால் எங்கள் வாழ்க்கை ஒரளவு அமைதி யாகக் கழிந்தது. நானும் தேர்விற்குப் படிக்க முடிந்தது.