பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 213 பெரிய தந்தையார் தொட்ட பணியினை நான் முடிக்க வேண்டும் என்பது என் பெரிய அன்னையார் அன்புக் கட்டளை. எனவே அத்துறையில் நான் வல்லவன் அல்லன் ஆயினும் எப்படியோ முயன்று ஒரிரு திங்களில் மண்டபப் பணியை நிறைவு செய்தேன். அந்த இறைபணி பற்றிய கட்டடத் தொடக்கமே பின் பல கட்டடங்களைக் கட்ட எனக்கு உறுதுணையாயிற்று. ஆயினும் அந்த ஆண்டு கார்த்திகை ஞாயிறு வருவதற்குள் அப்பணி முடியவில்லை. எனவே அவ்விழாவைத் தை மாதத்தில் வைத்துக் கொண்டோம். மண்டபத் திறப்பு விழாவை வைதீக முறையில் நடத்த வேண்டும் என்று பலர் சொன்னாலும் என் அன்னையார் நான் சொன்னதற்கே செவிசாய்த்தனர். காஞ்சி குமரன் அச்சகத்தில் திரு.வி.க. அவர்களைக் கண்டபின் எப்படியாவது அவர்களை நம் ஊருக்கு அழைத்து வர வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த எனக்கு அவ்விழா உதவி செய்தது. மண்டபத்தை அவர்களே திறக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். அவர்களும் இசைந்தார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்றன. திரு.வி.க. முன்னாள் மாலையே ஊருக்கு வந்து விட்டார்கள். அன்று மாலை பாலாற்று மணலில் அவர்கள் இருந்துகொண்டு நாற்புறமும் நோக்கி, இயற்கையில் தம்மை மறந்து மகிழ்ந்தார்கள். பல நாட்கள் அங்கேயே தங்கவும் விரும்பினார்கள். தூரத்தே தெரிந்த திருமுக்கூடலுக்கு' மறுநாள் காலை குளியலுக்குச் செல்ல வேண்டும் என்றார்கள். பாலாறும் சேயாறும் இணைந்து கலக்கும் கூடல் அது. அங்குள்ள பெருமாள் கோயில் பழையது; சோழர் காலத்தியது. அங்கே எடுத்த கல்வெட்டுப் படியால் அங்கே ஒரு பெரிய மருந்தகமும் மருத்துவக் கல்லூரி, வடமொழிக் கல்லூரி போன்றவையும் இருந்தனவென அறிகிறோம். அத்தகைய இயற்கைக் சூழலும் வரலாற்று முக்கியமும் கொண்டதுமான முக்கூடல் திரு.வி.க.வை ஆட்கொண்டது அதிசய மல்லவே!