பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. காஞ்சி வாழ்க்கைத் தொடக்கம் . தேர்வில் வெற்றிபெற்றபின் என் செய்வது என எண்ண மிட்டேன். அன்னையாரோ உடன் இருக்க வேண்டும் என . வற்புறுத்துகின்றார். வீட்டில் வேறு யாரும் ஆண்கள் இல்லா மையால் இருபத்தைந்தாண்டு தொடும் ஒர் இளைஞன் வீட்டுப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றுதான் பலர் சொல்லுவர். எனக்கு அத்தகைய அறவுரை கூறியவர் பலர். என்றாலும் எனக்குமட்டும் ஏதாவது ஆசிரியப் பணி செய்தால் என்ன? என்று எண்ணம் தோன்றிற்று. மண வாழ்வில் வெறுப்புற்று, சொந்தமான பயிர் வேலையும் இல்லாது, நாள் முழுதும் இப்படிச் சோம்பலாக வீட்டில் முடங்கிக் கிடப்பது எனக்கு வேதனையாக இருந்தது. மேலும் நான் தேர்விற்குப் பயிலும்போதுதான், படிக்கவேண்டிய பகுதிகள் இன்னும் எத்தனை எத்தனையோ மடங்குகள் உள்ளன என அறிந்தேன்; அறிதோ றறியாமை கண்டற் றால் என்ற குறளின் பொருளை உணர்ந்தேன். எனவே எங்காவது நகரங்களில் பணியாற்றினால், என் அறிவைத் தக்கார் வழி வளர்த்துக்கொள்ள இயலும் என எண்ணினேன். ஆகவே ஊருக்கு அருகிலேயே காஞ்சிபுரத்திலோ செங்கற் பட்டிலோ உள்ள பள்ளி ஒன்றில் தமிழாசிரியராகப் பணியாற்ற நினைத்தேன். அதுபோது என்னுடன் வாலாஜாபாத் இந்தமத பாடசாலையில் பணியாற்றிய அன்பர் ஒருவர் காஞ்சிபுரம் சென்று தாம் பயின்ற ஆண்டர்சன்: உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கே ஒரு தமிழாசிரியர் தேவை என அறிந்துவந்தார். அவர் தலைமை ஆசிரியரிடம் என்னைப் பற்றிக் கூறியதாகவும் என்னை உடன் அழைத்து வரும்படி அவர் சொன்னதாகவும் சொன்னார். எனினும் அன்னையின் உத்தரவு வாங்காது நான் எப்படிச் செல்ல முடியும்?