பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 ஆனந்த முதல் ஆனந்த வரை ஜோசப், எட்வட் சாமுவேல், அதிசயம் போன்றோர் அனுபவ மிக்க நல்லாசிரியர்களாய் இருந்தனர். அப்படியே இடைநிலை வகுப்புக்களில் மத்தேயு, சாலமன், ராஜமணி செல்லையா போன்ற பலரும் எனக்கு நன்கு அறிமுகமாயினர். அவர்களுள் சிலர் தமிழ் பயிலவேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்தனர். அந்த நாட்கள் தமிழுக்கு மலர்ச்சி உண்டாகத் தொடங்கிய காலம். எனவே பலர் பள்ளியிலும் வெளியிலும் தமிழ் பயில வேண்டுமென ஆர்வத் தோடு வந்தனர். ஏழெட்டு அன்பர்கள்-பிள்ளை பாளை யத்திலிருந்தும் பிறவிடங்களிலிருந்தும் நான் தங்கியிருந்த இடத்துக்கு வந்து தமிழ் பயின்றனர். பள்ளியிலும் பல ஆசிரியர்கள் தனியாகத் தமிழ் பயின்றனர். மாணவருள் சிலரும் திருக்குறள் போன்றவற்றைத் தனியாக மாலை வேளையில் என்னிடம் பயின்றனர். நானும் மற்றவர்களுக்கு விளக்கிச் சொல்லும் பேராற்றல்.பெற்றவன் அல்லனாயினும், பல நூல்களைப் பயின்று, பொருள் கண்டு, கூடியவரை அவர் கள் வெறுக்கா அளவில் பாடல்களைச் சொல்லிக்கொண்டு வந்தேன். அதுபோது காஞ்சியில் என் உள்ளம் கலந்த சில பெரியவர்களைப்பற்றி எண்ணவேண்டியுள்ளது. அவருள் பெரும்பாலோர் இன்னும் வாழ்கின்றனர். அவர்களுள் ஒரு சிலர் என் உள்ளத்தில் நிலைத்த இடத்தைப் பெற்றுள்ளனர். இரட்டை மண்டபத்தை அடுத்துள்ள மாளிகையில் காலை 6 மணிக்கே மூழ்கி, நீறு அணிந்து, ஒளி பொருந்திய முகப் பொலிவுடன் தம் ஆசனத்தில் உட்கார்ந்து வருவார்க் கெல்லாம் வழிகாட்டியாக நிற்கும் விசுவநாத ஐயர் அவர்தம் வாழ்வும் போக்கும் என்னைக் கவர்ந்தன. கோடையிலும் குளிரிலும் எந்த நாளிலும் நேரந் தவறாது அன்று நான் கண்டமைபோன்றே இன்றும் ஆங்கே உட்கார்ந்து வரு வார்க்கு வழிகாட்டுகின்றனர். அவர் வழக்கறிஞர்-எனினும்