பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை . 223 நேரிய பண்பாளர். உண்மையாக நேரிய வழக்குகளுக்கே வாதிடுவர். கூடியவரை இருவரையும் ஒற்றுமைப் படுத்தவே அவர் உள்ளம் விரும்பும். அவர் மாலை வேளைகளிலும் குறித்த நேரம் தவறாது, டென்னிஸ் ஆடச் செல்வதைக் காண்பதும் சிறந்ததாகும். அவருடைய பிள்ளைகளில் சிலர் என்னிடம் பயின்றனர். - கச்சபேச்சுரர் ஆலயத்துக்கு அடுத்து, அரிய மருத்துவத் தொண்டு செய்துவரும் ஆத்மானந்த அடிகளார் என் உள்ளங்கலந்த பெரியராவர். ஏழைகளுக்கெல்லாம் இலவச மருத்துவம் செய்தும், பலவகையில் மக்களுக்கு உதவியும் நின்ற உண்மைத் துறவியார் அவர் என்றும் கடுத்த முகமே காட்டி அறியாது அமைதியாகப் பேசும் அறிவும் பொலிவும் கூடிய முகத் தோற்றத்துடன் அவர் விளங்குவர். இன்று தளர்ந்த நிலையிலும் அவர் தோற்றத்தில் அந்த ஆக்கப் பொலிவைக் காணமுடியும். இவர்களையன்றி இன்னும் எண்ணற்ற அன்பர்கள் என் கண்முன் நிழலிடு கிறார்கள். அவர்களைப்பற்றியெல்லாம் ஈண்டு எழுதின் காலமும் எல்லையும் கணக்கிடாது நீளும். அவ்வப்போது பின்வரும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப சிற்சிலரை ஆங்காங்கே காட்டி அமையலாம் என எண்ணுகிறேன். ஓராண்டில் பல பொதுக்கூட்டங்களிலும் பேசினேன். ஆக, காஞ்சியில் என் முதலாண்டு பலனுள்ளதாக, நல்லவர் பலரை உற்றாராகப் பெறும் வகையில் அமைந்து என் வாழ்வுக்கு வழிகோலியது என்பது பொருந்தும். - காலம் நமக்கென நிற்காது ஓடிக்கொண்டிருக்கிறது; அப்படியேதான் கடிமணமும் போலும். நான் வேண்டாம் என்று தள்ளிக்கொண்டே வந்த மறுமணம் முடியும் நாளும் வந்துவிட்டது. எந்த வகையிலும் என் மாமியார் வீட்டார் என் வாழ்வை மலரவைக்க விரும்பவில்லை என அறிந்த தாலும் வேறு பிற சூழல்களாலும் நான் மறுமணத்துக்கு