பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 - ஆனந்த முதல் ஆனந்த வரை இசைய வேண்டிய நிலை உண்டாயிற்று. முன்னைய நிகழ்ச்சிகளால் நான் மறுமணம் செய்துகொள்வதிலும் துறவியாவதிலும் அவர்கள் வருந்தவில்லை என்பதை அறிந்த பிறகும், அன்னையும் பிறரும் வேண்டிய நிலையிலும் நான் வேறு என்ன செய்ய முடியும்? மேலும் ஓரிரு சூழ்நிலைகளும் அதற்குக் காரணமாக அமைந்தன. நான் இருபத்தைந்து வயது நிரம்பிய வாலிபன். எனினும் பலர் என்னிடம் தனியாகவும் வீட்டிற்கு வந்தும் பாடம் பயின்றார்கள் என்றேன். அவருள் உயர் வகுப்பில் பயிலும் இரண்டொரு மாணவியரும் இருந்தனர். அவர்கள் அவ்வாறு வந்து பயிலும்போது, எங்கள் ஊரில் எங்கள் தெருவில் இருந்து ஒருவர் என்னைக் காண்வந்தார். அவர் அந்தப் பெண்களைப் பார்த்ததும் என்ன எண்ணினாரோ? நேரே ஊருக்குச் சென்று நான் கெட்டுவிட்டேன்’ என்று என் அன்னையிடமே கூறிவிட்டார். அவர் தனக்கென இருக்கும் மனைவியைவிட்டு, பிறர் மனைவியர் மேல் மனம் வைத்துச் சுற்றித் திரிபவர். வயது ஐம்பதுக்கு மேலாகியும் அந்த வாழ்வில் இன்பம் கண்டவர், என் அன்னையார் அவர் சொல்லை அப்படியே நம்பாவிடினும் நான் போனபோது கண்டித்தார்கள். நான் அவரவர் புத்தி அவமவருக்கு என்று கோள் சொல்லியவரைப் பற்றிக் குறிப்பாகக் காட்டினேன். என் அன்னையாரும் உடனே அவரிடம் நான் சொல்லியதைச் சொல்லிவிட்டார்கள். அது முதல் அவர் இறக்கும் வரையில் என்னிடம் மரியாதையாகவே நடந்து கொண்டார் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். நிற்க, இந்த நிகழ்ச்சியும் செயலும் என் அன்னையார் உள்ளத்தில் புது வேகத்தை உண்டாக்கிவிட்டது. நான் ஒருவேளை மறுபடியும் உண்மையிலேயே வேறு யாராவது பெண்ணை மணம் செய்துகொள்வேனோ என அஞ்சினார்கள். முன்னமே காஞ்சி'க்கு அனுப்ப அஞ்சிய அன்னையார் இதற்