பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 227. இட்டமையைக் கூறினார். நான் என்னை இவ்வளவு பின் பற்றக் கூடியவர்களும் உளரா என வியந்தேன். மேலும் அவர் அப்போதே என்னை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அப்பிள்ளையைக் காட்டி என்னை வாழ்த்துமாறு பணித்தார். நானும் உளமார வாழ்த்தினேன். அவர்அந்தப் பரமசிவானந்தம்-தற்போது வடஆற்காடு மாவட்டத்தில் ஆசிரியப் பயிற்சிபெற்று ஒருபள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் என அறிகிறேன். பழங்கால மணமுறைப்படி என் திருமணம் நடந்தது. மணம் நடைபெற்ற மறுநாள் வேடிக்கையாகப் பிள்ளை பெண்ணுக்கும் பெண் பிள்ளைக்கும் நலங்கு வைத்தல் மரபு. அப்படியே எனக்கும் நடைபெற்றது. ஆனால் எதிர் பாராத வகையில் சடங்குகளில் ஒன்றாகிய அப்பளம் தட்டும் நிகழ்ச்சியில் நான் அதிர்ந்துபோனேன். அப்பளத்தை வெறுங்கையில் தட்டுவதற்குப் பதில், அதை என் கன்னத்தில் ஓங்கித்தட்டி அறைய அதிர்ந்தேன். உடனே எழுந்து அப்படியே ஒடிவிடலாமா என்று எண்ணினேன். நான் முன்னரே மணமானவன் ஆனமையின் அந்தப் பெண் என் மேல் காட்டிய வெறுப்போ அந்த அடியென நினைத்தேன். அன்றி முன்னவர்போன்று இவளும் வேறு யாரையாவது மணக்க நினைத்து நான் குறுக்கிட்டமையால் கொண்ட கோபத்தின் பயனோ அது என எண்ணினேன். பிற சடங்குகள் எப்படியோ நடைபெற்றது. எனக்கு மட்டும் அதன் காரணத்தை அறிந்துகொள்ள அவா உண்டாயிற்று. அக்காலத்தில் மணமான உடனே கைகோத்துப் பேசும் வழக்கம் இல்லை-இருந்தால் கேட்டிருப்பேன். பிறகு நேரில் கேட்கவேண்டிய காலத்தில்-நேரம் நேர்ந்த நாளில் அது பற்றி விளக்கம் கேட்டேன். முன்னரே எனக்கு அந்தப் பெண்ணைக் கொடுக்க அவர்தம் பெற்றோர் இசைந்த தாகவும் அவளும் மனமுவந்ததாகவும் என் பெற்றோருக்கும்