பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 233 விட்டது. கூட்டம் பற்றி எண்ணமே இல்லாது என்னைத் தேடிவந்த அவருக்கு-வெளியில் நின்றிருந்தவருக்கு இந்தத் தண்டனை-ஆனால் அந்த அதிகாரிகளால் என்னை ஒன்றும் செய்யமுடியவில்லை, காரணம் என் நிலை அன்று அப்படி. திருநாவுக்கரசு அவர்களை நினைத்தபோது மற்றொன்றும் நினைவுக்கு வருகின்றது. அவரும் நானும் எப்போதும் இணைந்தே இருப்போம். எங்கள் இருவருக்கும் உரிய நண்பர் ஒருவர் ஒருநாள் எங்கள் வீட்டிற்கு இவரை அழைத்துக் கொண்டு வந்தார். அப்போது அவர் பஞ்சாயத்துப் பார்வையாளராக இருந்தார். அங்கம்பாக்கம் பஞ்சாயத்தைப் பார்வையிட வேண்டும் என்றும் நாங்களும் உடன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நானும் ஊர் செல்வதற்கு மகிழ்ந்தேன். இரவில் எல்லாவற்றையும் முடித்துவிட்டு மறுநாள் காலை பள்ளிக்குத் திரும்பிவிடலாம் என்று எண்ணிப் புறப்பட்டோம். பெரிய அன்னையாரிடம் சொல்லிவிட்டு ஊருக்குச் சென்றோம். ஊரில் என் அன்னை யார் எங்களுக்கு உணவு ஆக்கிப் படைத்தார்கள். ஊர்க் கோயிலில் பஞ்சாயத்துக் கணக்கெல்லாம் பார்த்துவிட்டு, அப்படியே கோயிலில் இறைவனை வணங்கிவிட்டு, இரவு வீட்டிற்கு வந்து உணவுண்டு படுத்துக்கொண்டோம். எங்கள் பேச்சு பலவகையில் சென்றது. பஞ்சாயத்துப் பணிசெய்யும் நண்பர் அத்துறையில் வளர்ச்சிக்கு வழி இல்லை எனவும் கல்வித்துறையில் சென்றால் முன்னேறலாம் எனவும், ஆனால் அந்த ஆண்டு ஆசிரியப் பயிற்சிக்கு விண்ணப்பம் செய்யவில்லை எனவும் அடுத்த ஆண்டு விண்ணப்பம் செய்து சேர்வதற்குள் எத்தனையோ மாற்றங்கள் வந்து தன் முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டையாகலாம் எனவும் கூறினார். எனக்கு அப்போது ஒருவர் நினைவில் தோன்றி னார். எங்கள் ஊரை அடுத்த நெய்க்குப்பத்தில் பிறந்து நிலநூல் பேராசிரியராகி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பணி