பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 ஆனந்த முதல் ஆனந்த ഖത് யாற்றிய திரு. சுப்பிரம்ணிய ஐயர் என்னை நன்கு அறிவார். எங்களுக்கும் அந்த ஊரில் நிலம் இருந்தமையின் பலவகையில் எங்களுக்குள் கொடுக்கல் வாங்கல் முதல் நல்ல வகையில் உறவு இருந்தது. அப்போது சூலை இறுதி அல்லது ஆகஸ்டு முதல் என எண்ணுகிறேன். அவரால் ஏதாவது செய்யக் கூடுமானால் நான் நண்பரை அழைத்துச் செல்வதாகக் கூறினேன். ஆயினும் நண்பர் பாடம் வேறுபட்டது என்றும் நிலநூல் தரமாட்டார்கள் என்றும் தயங்கினார். நான், ஐயர் அவர்கள் எல்லாம் வல்லவர் என்றும் என்பொருட்டு எதையும் செய்வார் என்றும் முயற்சி யில் கெடுதல் இல்லை என்றும் மறுநாட்காலையிலேயே செல்லலாம் என்றும் சொன்னேன். வற்றிய வரண்ட காட் டில் முற்றிய மழை பெய்ததென அவர் மகிழ்ந்தார். காலை யில் என் பள்ளிக்கூடத்துக்கு விடுமுறைக் கடிதம் எழுதித் திருநாவுக்கரக அவர்கள் வழியே அனுப்பிவிட்டு நான் இரெயிலில் நண்பருடன் சைதாப்பேட்டைப் பயிற்சிக் கல்லூ ரிக்கு வந்து சேர்ந்தேன். அப்போது மணி 10க்கு மேலாகி இருந்தது. திரு. ஐயர் அவர்கள் பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். நாங்கள் அவர் அறையில் காத்துக்கொண்டிருந்தோம். வகுப்பு முடிந்ததும் வந்தார். அன்று உலகம் சுற்றிப் புகழ்பெற்ற ஐயர் அவர்கள் என்னிடம் காட்டிய பரிவு மறக்கற் பால தன்று. எங்கே வந்தாய்? என்று கேட்டார். நான் எல்லாவற்றையும் கூறி அவர் விண்ணப்பம் செய்யாததையும் விளக்கினேன். அவர் அதை யெல்லாம் பொருட்படுத்தாது, நீ ஏன் இதற்காக இவ்வளவு தூரம் வந்தாய்? இவரிடமே கடிதம் அனுப்பி யிருந்தால் போதாதா? நான் இவனை நிலநூல் பிரிவில் சேர்த்துக்கொள்கிறேன்' என்று என்னிடம் கூறி, உனக்குச் சம்மதமா?' என்று அவரைக் கேட்டார். அவரும் சரி எனத் தலையாட்டினார். 'உடனே ஐயர் அவர்கள் ‘இவன்