பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 ஆனந்த முதல் ஆனந்த வரை முழுக்க முழுக்கப் பத்துப் பதினைந்து நாட்கள் தேர்தல் களத் திலேயே மூழ்கி இருந்தனர். இவர்களையன்றி உதவிய பல பெரியவர்களை இன்னும் என்னால் மறக்க முடியாது. அவருள் முக்கிய மானவர் திரு. காளப்பர் அவர்கள். அவர்தம் தேர்தல் உறவே பின் நான் காஞ்சியில் அச்சகத் தொழில் தொடங்க உதவியாக நின்றது. அவர் அதே தமிழ்க்கலை அச்சகத்தை 'முத்தமிழ் அச்சகம்’ என்ற பெயரில் நடத்தி வந்தார். அவரை யன்றிக் காவாம்பயர் திரு. இராசகோபால் முதலியார், மாகறல் திருமாகறல் முதலியார், இளையனார் வேலூர் சின்னசாமி முதலியார், நடேச முதலியார், காவாந்தண்டலம் பச்சையப்ப முதலியார், வாடாதவூர் மலைக் கொழுந்து முதலியார், அவளுர் துரைசாமி நாயகர் போன்ற பல அன்பர்கள் என் தேர்தலில் வெற்றி பெற உதவினர். என் கிராமத்தில் எனக்கு உற்றவர் என்பவரே எனக்கு மாறுபட்டு நிற்க. அவருக்கு வாய்ப்பூச்சாகச் சில வெண்பொற்காசுகள் வழங்க நேர்ந்தது. இத்தேர்தல்களத்தில் நேராகவே பேரறிஞர் அண்ணா அவர்களும் சட்டமன்றத் தலைவராக இருந்த புலவர் கோவிந்தன் அவர்களும் எங்க ளுடன் கலந்து கொண்டு ஊர் ஊராக வந்து ஒட்டு கேட்ட காட்சி இன்றும் என்முன் நிற்கின்றது. அக்காலத்தில் (1935) காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வேறு நல்ல அரசியல் கட்சிகள் இல்லையாதலாலும், ஒரு தமிழாசிரியர் அரசியலில் போட்டி இடுவது அதுவே முதல் தடவை ஆனதாலும், பேரறிஞர் அண்ணா அவர்கள் மகிழ்வோடு கலந்து எனக்கு வழிகாட்டியாக உதவினர். இவ்வாறு எத்தனையோ வகையில் அனைவர்தம் உதவியையும் பெற்றுத் தேர்தலிலே வெற்றி பெற்றேன். காஞ்சிபுரத்தில் தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் முடிவை அறிவித்ததும் முதல் முதல் என்னைப் பாராட்டிக் கைகுலுக்கிப் பெருமைப்படுத்தியவர் டாக்டர் சீனிவாசன் அவர்கள்தாம். ஆம்! அதனால் அவர் தம்