பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 239 அரசியல் அறிவையும் தன்மையுையும். நன்கு புலப்படுத்திக் கொண்டார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றதோடு நான் கற்றுக் கொண்ட பாடங்கள் பல. அன்று நான் ஒரு திட்டமான முடிவினை மேற்கொண் டேன். வருங்காலத்தில் இனி எக்காரணம் கொண்டும் எந்த வகையான தேர்தலிலும் என் ஆயுளில் போட்டி இடமாட் டேன்' என்ற உறுதியே அது. அந்த உறுதியை இன்று வரையில் தளராது மேற்கொண்டு வருவதாகவே நான் எண்ணியுள்ளேன். பிற்காலத்தில் பல நிலையங்களில் பல வகையான இடங்களுக்குப் போட்டி இடவேண்டிய தேவை களும் இன்றியமையாநிலைகளும் உண்டான போதிலும் அவற்றையெல்லாம் தள்ளியே விலகி வருகிறேன். கல்வித் துறையிலும் கல்லூரிச் சார்பில் பல்கலைக் கழகப் பணிக்குச் செல்லும் நெறியிலும்கூட மிக எளிதாக-போட்டி இல்லா மலும்கூட வரக்கூடிய வாய்ப்புகள் எங்கள் கல்லூரியிலும் பிற இடங்களிலும் இருந்தும் நான் அவற்றில் தலையிடுவதே யில்லை. பல்கலைக் கழக அறிஞர்குழு (Academic Council) விற்குக் கல்லூரிச் சார்பில் போட்டி இடுமாறு அன்பர் பலர் வற்புறுத்தினர்; நான் மறுத்தேன். எனினும் அரசாங்கமே. கவர்னர் நியமனத்தால் அக்குழுவிற்கு மூன்றுமுறை (ஒன்பது ஆண்டுக்கு) என்னை நியமித்தது. அவர்களுக்கு நன்றி யுடையேன். உரிமை பெற்ற பின்பு முன்னைய ஆட்சியாளர் களும் இன்றைய ஆட்சியாளர்களும் சட்டசபைக்கு என்னைப் பலமுறை பல இடங்களுக்குப் போட்டி இடச் சொன்ன போதெல்லாம் இதே காரணம் காட்டியே விலகினேன். இதற்காக என் அன்பர் உடனிருந்த ஆசிரியர் திரு. க. அன்பழகன் அவர்கள் கூட என்னை ஒருமுறை கடிந்து கொண்டார்கள். அவர் ஒருமுறை (1957 என எண்ணு கிறேன்) சட்டசபைக்கு நின்ற போது என்னையும் உத்திரன் மேரூர்த் தொகுதியில் நிற்கக் கேட்டார்கள். நான்